சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.097   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்புறவம் - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=U4x9pIXwrqs   Add audio link Add Audio

எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த
மையார்கண்டன் மாதுமைவைகுந் திருமேனிச்
செய்யான் வெண்ணீறணிவான் றிகழ்பொற் பதிபோலும்
பொய்யாநாவி னந்தணர்வாழும் புறவம்மே.

1

மாதொருபாலு மாலொருபாலும் மகிழ்கின்ற
நாதனென்றேத்து நம்பரன்வைகுந் நகர்போலும்
மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப்
போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே.

2

வற்றாநதியும் மதியும் பொதியுஞ் சடைமேலே
புற்றாரரவின் படமாடவுமிப் புவனிக்கோர்
பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே.

3

துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து
மின்னார்சடைமே லரவும்மதியும் விளையாடப்
பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
பொன்னார்புரிநூ லந்தணர்வாழும் புறவம்மே.

4

தேவாவரனே சரணென்றிமையோர் திசைதோறுங்
காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு
பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும்
பூவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே.

5
Go to top

கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம்
அற்றரனேநின் னடிசரணென்னு மடியோர்க்குப்
பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர்
பொற்றிகழ்மாடத் தொளிகள் நிலாவும் புறவம்மே.

6

எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக்
கொண்டெழுகோல முகில்போற்பெரிய கரிதன்னைப்
பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர்
புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே.

7

பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத்
துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழின்மேவும்
அரக்கன்றிண்டோ ளழிவித்தானக் காலத்திற்
புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே.

8

மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும்
மூர்த்தியை நாடிக் காணவொணாது முயல்விட்டாங்
கேத்தவெளிப்பா டெய்தியவன்ற னிடமென்பர்
பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே.

9

வையகநீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான்
மெய்யலதேர ருண்டிலையென்றே நின்றேதங்
கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர்
பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே.

10
Go to top

பொன்னியன்மாடப் புரிசைநிலாவும் புறவத்து
மன்னியவீசன் சேவடிநாளும் பணிகின்ற
தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன்
இன்னிசையீரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புறவம்
1.074   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நறவம் நிறை வண்டு அறை
Tune - தக்கேசி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.097   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று
Tune - குறிஞ்சி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பெண் இயல் உருவினர், பெருகிய
Tune - சாதாரி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Fri, 13 Feb 2026 16:28:04 +0000