சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.120   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருமூக்கீச்சுரம் (உறையூர்) - செவ்வழி ரசிகப்ரியா எதுகுல காம்போதி இஷ்டாங்கிணி ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=VNX_HFHnlpY   Add audio link Add Audio

சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை யொடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.

1

வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்
கொண்டலாரும் புனல்சேர்த் துமையாளொடுங் கூட்டமா
விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில் வேள்வெந்தெழக்
கண்டவர் மூக்கீச்சரத்தெம் அடிகள் செய்கன்மமே.

2

மருவலார்தம் மதிலெய்த துவும்மான் மதலையை
உருவிலாரவ் வெரியூட்டி யதும்உல குண்டதால்
செருவிலாரும் புலிசெங் கயலானை யினான்செய்த
பொருவின் மூக்கீச்சரத்தெம் அடிகள் செயும்பூசலே.

3

அன்னமன்னந் நடைச்சாய லாளோ டழகெய்தவே
மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணம்
தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்
மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்மாயமே.

4

விடமுனாரவ் வழல்வாய தோர் பாம்பரை வீக்கியே
நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்
வடமன்நீடு புகழ்ப்பூழி யன்றென்ன வன்கோழிமன்
அடன்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரச்சமே.

5
Go to top

வெந்தநீறு மெய்யிற் பூசுவராடுவர் வீங்கிருள்
வந்தெனாரவ் வளைகொள்வதும் இங்கொரு மாயமாம்
அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய
எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரேதமே.

6

அரையிலாருங் கலையில்ல வனாணொடு பெண்ணுமாய்
உரையிலாரவ் வழலாடு வரொன்றலர் காண்மினோ
விரவலார்தம் மதின்மூன் றுடன்வெவ்வழ லாக்கினான்
அரையன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரச்சமே.

7

ஈர்க்குநீர்ச்செஞ் சடைக்கேற் றதுங்கூற்றை யுதைத்ததும்
கூர்க்குநன்மூ விலைவேல்வல னேந்திய கொள்கையும்
ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தை நெரித்தவ்வடல்
மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.

8

நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச்
சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான்
சீரினாலங் கொளிர்தென்ன வன்செம்பி யன்வில்லவன்
சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்செம்மையே.

9

வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்
உண்பினாலே யுரைப்பார் மொழி யூனமதாக்கினான்
ஒண்புலால்வேன் மிகவல்லவ னோங்கெழிற் கிள்ளிசேர்
பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.

10
Go to top

மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச்
செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லராய்வாழ் பவர்காழி யுள்ஞான சம்பந்தன
சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமூக்கீச்சுரம் (உறையூர்)
2.120   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சாந்தம் வெண்நீறு எனப் பூசி,
Tune - செவ்வழி   (திருமூக்கீச்சுரம் (உறையூர்) )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000