சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.081   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பாண்டிக்கொடுமுடி - திருக்குறுந்தொகை அருள்தரு பண்மொழியம்மை உடனுறை அருள்மிகு கொடுமுடிநாதேசுவரர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=05urhAg14Dg   Add audio link Add Audio

சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.

1

பிரமன் மாலறி யாத பெருமையன்
தரும மாகிய தத்துவ னெம்பிரான்
பரம னாருறை பாண்டிக் கொடுமுடி
கரும மாகத் தொழுமட நெஞ்சமே.

2

ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்
தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி
ஈச னேயெனு மித்தனை யல்லது
பேசு மாறறி யாளொரு பேதையே.

3

தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
காண்டலுமெளி யன்னடி யார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.

4

நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
இருக்கொ டும்பணிந் தேத்த விருந்தவன்
திருக்கொ டும்முடி யென்றலுந் தீவினைக்
கருக்கெ டும்மிது கைகண்ட யோகமே.

5
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பாண்டிக்கொடுமுடி
2.069   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பெண் அமர் மேனியினாரும், பிறை
Tune - காந்தாரம்   (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை)
5.081   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை,
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000