சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.013   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருத்துறையூர் (திருத்தளூர்) - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி ராகத்தில் திருமுறை அருள்தரு பூங்கோதையம்மை உடனுறை அருள்மிகு துறையூரப்பர் திருவடிகள் போற்றி
நம்பியாரூரர் தம்மை வலிய ஆட்கொண்டருளிய அருட்டுறை இறைவரை இறைஞ்சித் தம்முடைய ஊராகிய திரு நாவலூரை அடைந்தார். அங்குக் கோயில் கொண்டருளிய பெரு மானைப் பணிந்து செந்தமிழ்ப் பாமாலை பாடிப் போற்றினார். பின்னர் அருகில் உள்ள திருத் துறையூரை அடைந்து பெருமான் திருமுன் நின்று மலை ஆர் அருவித்திரள் என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி தவநெறி தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்து திருப்பதிகம் பாடினார். பெருமான் சுந்தரர் வேண்டியவாறே தவநெறி தந்தருளினார்.
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=DmK48qjw5j8  https://www.youtube.com/watch?v=ctvmgjRypXk   Add audio link Add Audio

மலையாரரு வித்திரள்
மாமணி யுந்திக்
குலையாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கலையார் அல்குற் கன்னியர்
ஆடுந் துறையூர்த்
தலைவாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

1

மத்தம்மத யானையின்
வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப்
பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

2

கந்தங்கமழ் காரகில்
சந்தன முந்திச்
செந்தண்புனல் வந்திழி
பெண்ணை வடபால்
மந்தீபல மாநடம்
ஆடுந் துறையூர்
எந்தாய் உனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

3

அரும்பார்ந்தன மல்லிகை
சண்பகஞ் சாடிச்
சுரும்பாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கரும்பார்மொழிக் கன்னியர்
ஆடுந் துறையூர்
விரும்பாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

4

பாடார்ந்தன மாவும்
பலாக்களுஞ் சாடி
நாடாரவந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
மாடார்ந்தன மாளிகை
சூழுந் துறையூர்
வேடாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

5
Go to top

மட்டார்மலர்க் கொன்றையும்
வன்னியுஞ் சாடி
மொட்டாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கொட்டாட்டொடு பாட்டொலி
ஓவாத் துறையூர்ச்
சிட்டாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

6

மாதார்மயிற் பீலியும்
வெண்ணுரை யுந்தித்
தாதாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
போதார்ந்தன பொய்கைகள்
சூழுந் துறையூர்
நாதாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

7

கொய்யார்மலர்க் கோங்கொடு
வேங்கையுஞ் சாடிச்
செய்யாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
மையார்தடங் கண்ணியர்
ஆடுந் துறையூர்
ஐயாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

8

விண்ணார்ந்தன மேகங்கள்
நின்று பொழிய
மண்ணாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
பண்ணார்மொழிப் பாவையர்
ஆடுந் துறையூர்
அண்ணாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

9

மாவாய்ப்பிளந் தானும்
மலர்மிசை யானும்
ஆவாஅவர் தேடித்
திரிந்தல மந்தார்
பூவார்ந்தன பொய்கைகள்
சூழுந் துறையூர்த்
தேவாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

10
Go to top

செய்யார்கம லம்மலர்
நாவலூர் மன்னன்
கையால்தொழு தேத்தப்
படுந்துறை யூர்மேல்
பொய்யாத்தமிழ் ஊரன்
உரைத்தன வல்லார்
மெய்யேபெறு வார்கள்
தவநெறி தானே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருத்துறையூர் (திருத்தளூர்)
7.013   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மலை ஆர் அருவித்திரள் மா
Tune - தக்கராகம்   (திருத்துறையூர் (திருத்தளூர்) துறையூரப்பர் பூங்கோதையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000