![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=CDoxdF51pUQ Add audio link
7.027
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு அஞ்சனாட்சியம்மை உடனுறை அருள்மிகு உச்சிவரதநாயகர் திருவடிகள் போற்றி
விடையா ருங்கொடியாய் வெறி
யார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பர
மாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அடிகே ளெம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.
1
மறையோர் வானவருந் தொழு
தேத்தி வணங்கநின்ற
இறைவா எம்பெருமான் எனக்
கின்னமு தாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடி
யேனையும் அஞ்சலென்னே.
2
சிலையால் முப்புரங்கள் பொடி
யாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே மட
மாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக்
கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடி
யேனையும் அஞ்சலென்னே.
3
செய்யார் மேனியனே திரு
நீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா மத
யானை யுரித்தவனே
கையார் சூலத்தினாய் திருக்
கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.
4
சந்தார் வெண்குழையாய் சரி
கோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள் ஒரு
பாக மமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான் அடி
யேனையும் ஏன்றுகொள்ளே.
5
Go to top
அரையார் கீளொடுகோ வண
மும்மர வும்மசைத்து
விரையார் கொன்றையுடன் விளங்
கும்பிறை மேலுடையாய்
கரையா ரும்வயல்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அரையா எம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.
6
பாரார் விண்ணவரும் பர
விப்பணிந் தேத்தநின்ற
சீரார் மேனியனே திகழ்
நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே அடி
யேனையும் அஞ்சலென்னே.
7
நிலனே நீர்வளிதீ நெடு
வானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன்
மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பகமே திருக்
கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடி
யேனையும் அஞ்சலென்னே.
8
வருங்கா லன்னுயிரை மடி
யத்திரு மெல்விரலால்
பெரும்பா லன்றனக்காய்ப் பிரி
வித்த பெருந்தகையே
கரும்பா ரும்வயல்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடி
யேனையும் வேண்டுதியே.
9
அலையார் தண்புனல்சூழ்ந் தழ
காகி விழவமரும்
கலையார் மாதவர்சேர் திருக்
கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாணுதலாள் நல்ல
சிங்கடி யப்பனுரை
விலையார் மாலைவல்லார் வியன்
மூவுல காள்பவரே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை)
1.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வடம் திகழ் மென் முலையாளைப்
Tune - தக்கராகம்
(திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)
6.060
திருநாவுக்கரசர்
தேவாரம்
மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி
Tune - திருத்தாண்டகம்
(திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)
7.027
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
விடை ஆரும் கொடியாய்! வெறி
Tune - நட்டராகம்
(திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) உச்சிவரதநாயகர் அஞ்சனாட்சியம்மை)