| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
+ Show Meaning https://sivaya.org/thiruvaasagam/43 Thiruvarthai Thiruvasagam.mp3 https://sivaya.org/thiruvasagam2/43 Thiruvaarthai.mp3 Add audio link
8.143
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அறுசீர் விருத்தம்
அறிவித்து அன்பு உறுதல் இறைவனின் அருள் பெற்ற மற்ற பக்தர்களை ஆன்மா வணங்குகிறது
மாதிவர் பாகன் மறைபயின்ற
வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கரு ணையடி
யார்குலாவுநீ திகுணமாக நல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த
அருளறிவார் எம்பிரா னாவாரே.
1
மாலயன் வானவர் கோனும்வந்து
வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம தனிடை வந்திழிந்து
நன்னெறி காட்டி நலம்திகழுங்
கோல மணியணி மாடநீடு
குலாவு மிடவை மடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந்
திறமறிவார் எம்பிரா னாவாரே.
2
அணிமுடி ஆதி அமரர்கோமான்
ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப்
பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெட நல்கும் பெருந்துறையெம்
பேரரு ளாளன்பெண் பாலுகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும்
வகையறி வார் எம்பிரா னாவாரே.
3
வேடுரு வாகி மகேந்திரத்து
மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமாஅன்
சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி
ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட
இயல்பறிவார் எம்பிரா னாவாரே.
4
வந்திமை யோர்கள் வணங்கியேத்த
மாக்கரு ணைக்கட லாய்அடியார்
பந்தனை விண்டற நல்கும்எங்கள்
பரமன் பெருந்துறை ஆதிஅந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன்
றோங்கு மதிலிலங் கைஅதனிற்
பந்தணை மெல்விர லாட்கருளும்
பரிசறிவார் எம்பிரா னாவாரே.
5
Go to top
வேவத் திரிபுரம் செற்றவில்லி
வேடுவ னாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே
எம்பெரு மான்தான் இயங்குகாட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன்
எந்தை பெருந்துறை ஆதிஅன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த
கிடப்பறிவார் எம்பிரா னாவாரே.
6
நாதம் உடையதோர் நற்கமலப்
போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த
ஒளிவளர் சோதியெம் ஈசன்மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல்லார் எம்பிரா னாவாரே.
7
பூவலர் கொன்றைய மாலைமார்பன்
போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன்
வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன்
இருங்கடல் வாணற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும்
உருவறிவார் எம்பிரா னாவாரே.
8
தூவெள்ளை நீறணி எம்பெருமான்
சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன்
தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித்
தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளுங்
கிடப்பறிவார் எம்பிரா னாவாரே.
9
அங்கணன் எங்கள் அமரர்பெம்மான்
அடியார்க் கமுதன் அவனிவந்த
எங்கள் பிரான்இரும் பாசந்தீர
இகபர மாயதோர் இன்பமெய்தச்
சங்கங் கவர்ந்துவண் சாத்தினோடுஞ்
சதுரன் பெருந்துறை ஆளிஅன்று
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த
வகையறிவார் எம்பிரா னாவாரே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்
8.101
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.01
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.02
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - II. அறிவுறுத்தல் (11-20) நாடகத்தால் உன் அடியார்போல்
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.03
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - III. சுட்டறுத்தல் (21-30) வெள்ளம் தாழ் விரி சடையாய்!
Tune - வெள்ளம் தாழ் விரி சடையாய்!
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.04
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - IV ஆன்ம சுத்தி (31-40) ஆடுகின்றிலை; கூத்துஉடையான்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.05
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - V கைம்மாறு கொடுத்தல் (41-50) இரு கை யானையை ஒத்து இருந்து
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.06
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - VI அநுபோக சுத்தி (51-60) ஈசனே! என் எம்மானே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.07
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - VII. காருணியத்து இரங்கல் (61-70) தரிக்கிலேன் காய வாழ்க்கை
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.08
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் -VIII. ஆனந்தத்து அழுந்தல் (71-80) புணர்ப்ப தொக்க எந்தை என்னை
Tune - அச்சமில்லை அச்சமில்லை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.09
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் -IX . ஆனந்த பரவசம் (81-90) விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.10
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - X. ஆனந்தாதீதம் (91-100) மாறு இலாத மாக் கருணை வெள்ளமே
Tune - ஹரிவராசனம்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.120
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
Tune - புறநீர்மை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.123
மாணிக்க வாசகர்
திருவாசகம்
செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
Tune - ஹரிவராசனம்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.124
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.125
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.126
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.127
மாணிக்க வாசகர்
திருவாசகம்
புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.128
மாணிக்க வாசகர்
திருவாசகம்
வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
Tune - அக்ஷரமணமாலை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.129
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அருட்பத்து - சோதியே சுடரே
Tune - அக்ஷரமணமாலை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.132
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.133
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.134
மாணிக்க வாசகர்
திருவாசகம்
உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.136
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.138
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.141
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அற்புதப்பத்து - மைய லாய்இந்த
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.142
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.143
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவார்த்தை - மாதிவர் பாகன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.144
மாணிக்க வாசகர்
திருவாசகம்
எண்ணப்பதிகம் - பாருருவாய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.147
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
Tune - ஏரார் இளங்கிளியே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.148
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
Tune - ஏரார் இளங்கிளியே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.150
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆனந்தமாலை - மின்னே ரனைய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
12.900
கடவுண்மாமுனிவர்
திருவாதவூரர் புராணம்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )