சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.130   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவையாறு - மேகராகக்குறிஞ்சி கவாம்போதி நீலாம்பரி காஞ்சனபௌலி ராகத்தில் திருமுறை அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=rZnYYLAHzqE   Add audio link Add Audio

புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி,
அலமந்த போது ஆக, அஞ்சேல்! என்று அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி,
சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.

1
ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக்காலத்து `அஞ்சேல்` என்றுரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரான் அமரும் கோயிலை உடையது நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட அவ்வாடலுக்கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.

விடல் ஏறு |படநாகம் |அரைக்கு அசைத்து,| வெற்பு அரையன் |பாவையோடும்
அடல் ஏறு |ஒன்று அது |ஏறி, அம் சொலீர், |பலி! என்னும்| அடிகள் கோயில்
கடல் ஏறித் |திரை மோதிக் |காவிரியின் | உடன் வந்து |கங்குல் வைகி,
திடல் ஏறிச் |சுரிசங்கம் |செழு முத்து |அங்கு ஈன்று |அலைக்கும் |திரு ஐயாறே.

2
கொல்லுதலாகிய குற்றம் பொருந்திய படத்தினையுடைய நாகத்தை இடையிற்கட்டி மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு வலிமை பொருந்திய விடையேற்றின் மேல் ஏறி அழகிய சொற்களைப் பேசும் மகளிரே! பிச்சையிடுங்கள் என்று கேட்டுச் சென்ற சிவபிரானது கோயிலையுடையது வளைந்த மூக்கினையுடைய கடற் சங்குகள் கடலினின்றும் அலை வழியாக அதில் பாயும் காவிரியோடு வந்து இரவின்கண் திடலில் ஏறித்தங்கிச் செழுமையான முத்துக்களை ஈன்று சஞ்சரிக்கும் திருவையாறாகும்.

கங்காளர், கயிலாயமலையாளர், கானப்பேராளர், மங்கை-
பங்காளர், திரிசூலப்படையாளர், விடையாளர், பயிலும் கோயில்
கொங்கு ஆள் அப் |பொழில் நுழைந்து, |கூர்வாயால் |இறகு  உலர்த்தி, | கூதல் நீங்கி,
செங்கால் நல் வெண்குருகு, பைங்கானல் இரை தேரும் திரு ஐயாறே.

3
சிறந்த பிரமன் திருமால் ஆகியோரின் முழு எலும்புக்கூட்டை அணிந்தவரும் கயிலாய மலையில் உறைபவரும் கானப்பேர் என்னும் தலத்தில் எழுந்தருளியவரும் மங்கை பங்கரும் முத்தலைச் சூலப்படை ஏந்தியவரும் விடை ஊர்தியை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய கோயிலை உடையது சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளில் நுழைந்து கூரிய தம் அலகுகளால் தம் இறகுகளைக் கோதிக் குளிர் நீங்கிப் பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைகளைத் தேடும் திருவையாறாகும்.

ஊன் பாயும் உடைதலைக் கொண்டு ஊர் ஊரின் பலிக்கு உழல்வார், உமையாள்பங்கர்,
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார், தழல் உருவர், தங்கும் கோயில்
மான் பாய, வயல் அருகே மரம் ஏறி, மந்தி பாய் மடுக்கள் தோறும்
தேன் பாய, மீன் பாய, செழுங்கமலமொட்டு அலரும் திரு ஐயாறே.

4
புலால் பொருந்தியதாய் முடை நாற்றமுடைத்தாய் உள்ள தலையோட்டைக் கையில் ஏந்தி ஊர்கள்தோறும் பலியேற்று உழல்பவரும் உமை பாகரும் பாய்ந்து செல்லும் விடையேற்றை உடையவரும் நன்மைகளைச் செய்வதால் சங்கரன் என்ற பெயரை உடையவரும் தழல் உருவினருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது மான் துள்ளித்திரிய வயலருகே உள்ள மரங்களில் ஏறி மந்திகள் பாய்வதால் மடுக்களில் தேன்பாய அதனால் மீன்கள் துள்ளவும் செழுமையான தாமரை மொட்டுக்கள் அலரவும் விளங்குவதாகிய திருவையாறாகும்.

நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள் எருக்கும், நிறைந்த கொன்றைத்
தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில்
கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதித்
தேர் ஓடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே.

5
கங்கைநதி வில்வம் பிறைமதி வெள்ளெருக்கு கொன்றை மலர் நிறைந்த மாலை குளிர்ந்த கரந்தை ஆகியவற்றைச் சடையின்கண் அணிந்த தத்துவனாகிய சிவபிரான் தங்கியுள்ள கோயிலையுடையது மேகமண்டலம் வரை உயர்ந்து சென்று வானத்தை அளந்து மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்ததும் மணம் வீசும் வீடுகளை உடைய தேரோடும் வீதிகளில் அரங்குகளில் ஏறி அணிகலன்கள் புனைந்த இளம் பெண்கள் நடனம் ஆடுவதுமாகிய திருவையாறாகும்.
Go to top

வேந்து ஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி,
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்
காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாட, கவின் ஆர் வீதி,
தேம்தாம் என்று, அரங்கு ஏறிச் சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.

6
அனைத்துலகங்களுக்கும் வேந்தனாய் விண்ணவர் களுக்கும் மண்ணவர்களுக்கும் வழி காட்டும் வள்ளலாய் மணங்கமழும் கொன்றை மாலையைச் சடையின்மிசை அணிந்தவனாய் புண்ணிய வடிவினனாய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது மகளிர் காந்தாரப் பண்ணமைத்து இசைபாட அழகிய வீதிகளில் அமைந்த அரங்கங்களில் ஏறி அணிகலன்கள் பூண்ட இளம் பெண்கள் தேம் தாம் என்ற ஒலிக் குறிப்போடு நடனம் ஆடும் திருவையாறாகும்.

நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும் கோயில்
குன்று எலாம் |குயில் கூவ,| கொழும் பிரச|மலர் பாய்ந்து |வாசம் மல்கு
தென்றலார் அடி வருட, செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே.

7
நீண்ட வானவெளியில் நின்று உலவி தேவர்கள் வாழ்விடங்களை அழித்துவந்த முப்புரங்களையும் நீண்ட கூரிய அம்பு சென்று உலவும்படி கணை தொடுத்த வில்லாளியும் கயிலைமலை ஆளியுமாகிய சிவபிரான் சேர்ந்துறையும் கோயிலையுடையது சிறுமலைகளில் குயில்கள் கூவவும் செழுமையான தேன் நிறைந்த மலர்களைத் தீண்டி மணம் மிகுந்து வருவதாகிய தென்றல் காற்று அடிவருடவும் அவற்றால் செழுமையான கரும்புகள் கண் வளரும் வளமுடைய திருவையாறாகும்.

அஞ்சாதே |கயிலாய|மலை எடுத்த |அரக்கர்கோன் | தலைகள் பத்தும்,
மஞ்சு ஆடு |தோள், நெரிய |அடர்த்து, அவனுக்கு | அருள்புரிந்த | மைந்தர் கோயில்
இஞ்சாயல் இளந் தெங்கின் பழம் வீழ, இள மேதி இரிந்து அங்கு ஓடி,
செஞ்சாலிக்|கதிர் உழக்கி, |செழுங் கமல |வயல் படியும் |திரு ஐயாறே.

8
அஞ்சாமல் கயிலை மலையை எடுத்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தையும் வலிமை பொருந்திய அவன் தோள்களோடு நெரியுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் புரிந்த சிவபிரான் எழுந்தருளிய கோயிலைஉடையது. இனிய தோற்றத்தையுடைய இளந்தென்னையில் காய்த்த நெற்று விழ அதனைக் கண்டு அஞ்சிய எருமை இளங்கன்று அஞ்சி ஓடி செந்நெற் கதிர்களைக் காலால் மிதித்துச் செழுமையான தாமரைகள் களையாகப் பூத்த வயல்களில் படியும் திருவையாறாகும்.

மேல் ஓடி விசும்பு அணவி, வியன் நிலத்தை மிக அகழ்ந்து, மிக்கு நாடும்
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில்
கோல் ஓட, கோல்வளையார் கூத்தாட, குவிமுலையார் முகத்தில் நின்று
சேல் ஓட, சிலை ஆட, சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.

9
அன்னமாய் மேலே பறந்து சென்று வானத்தைக் கலந்தும் அகன்ற நிலத்தை ஆழமாக அகழ்ந்தும் முயற்சியோடு தேடிய நான்முகன் திருமால் ஆகியோர் அறிய முடியாதவாறு ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் கோயிலையுடையது கூத்தர்கள் கையில் வைத்து ஆட்டும் அபிநயக் கோலுடன் திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாட திரண்ட தனங்களையுடைய அச்சேயிழையார் முகத்தில் கண்களாகிய சேல்மீன்கள் பிறழவும் வில் போன்ற புருவங்கள் மேலும் கீழும் செல்லவும் நடனமாடும் திருவையாறாகும்.

குண்டாடு குற்று உடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே, ஆள் ஆமின், மேவித் தொண்டீர்!
எண்தோளர், முக்கண்ணர், எம் ஈசர், இறைவர், இனிது அமரும் கோயில்
செண்டு ஆடு புனல் பொன்னிச் செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே.

10
இழிசெயல்களில் ஈடுபடுவோராய்ச் சிறிய ஆடையினராய்த் திரியும் சமணர்களும் சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத சொற்களையும் வஞ்சனை பொருந்திய உரைகளையும் கேளாமல் தொண்டர்களே! நீவிர் சிவபிரானை அடைந்து அவருக்கு ஆட்படுவீர்களாக. எட்டுத் தோள்களையும் முக்குணங்களையும் உடைய எம் ஈசனாகிய இறைவன் இனிதாக எழுந்தருளியிருக்கும் கோயிலையுடையது பூக்களைச் செண்டுகள் போல் உருட்டி ஆட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த காவிரி செழுமையான மணிகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவையாறு என்னும் தலமாகும்.
Go to top

அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை, அம் தண் காழி
மன்னிய சீர் மறை நாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல்
இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி ஏத்துவார்கள்
தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே!

11
அன்னப் பறவைகள் நிறைந்த பொழில்கள் புடை சூழ்ந்து விளங்கும் திருவையாற்றுப் பெருமானை அழகிய தண்மையான சீகாழிப்பதியில் வாழும் சிறப்பு மிக்க வேதங்கள் பயிலும் நாவினன் ஆகிய புகழ் வளரும் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்களாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி ஈசனடியை ஏத்துபவர்கள் புகழோடு தவநெறியின் பயனாக விளங்கும் அமரர் உலகத்தைத் தாழாமல் பெறுவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவையாறு
1.036   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
1.120   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
1.130   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
2.006   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
2.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.003   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.013   திருநாவுக்கரசர்   தேவாரம்   விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.038   திருநாவுக்கரசர்   தேவாரம்   கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.039   திருநாவுக்கரசர்   தேவாரம்   குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.091   திருநாவுக்கரசர்   தேவாரம்   குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.092   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.098   திருநாவுக்கரசர்   தேவாரம்   அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்   (திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
5.027   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
5.028   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
6.037   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
6.038   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
7.077   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000