பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் தோள் மிசையே
பவளக்குழை தழைத்தால் ஒக்கும், பல்சடை; அச் சடைமேல்
பவளக்கொழுந்து அன்ன, பைம்முக நாகம்; அந் நாகத்தொடும்,
பவளக்கண் வாலமதி, எந்தை சூடும் பனிமலரே.
|
1
|
எம்பெருமானுக்குத் திண்ணிய தோள்கள் பெரிய பவளமலைகள் போலவும், தோள்களில் படியும் சடைக்கற்றைகள் பவளத்தின் தளிர்கள் போலவும், சடைமேல் உள்ள படமெடுக்கும் தலையை உடைய நாகம் பவளக் கொழுந்து போலவும், நாகத்தொடு சூடப்பட்ட இளம்பிறை பவளத்தின் குளிர்ந்த மலர் போலவும் காட்சி வழங்குகின்றன. | |
முருகு ஆர் நறுமலர் இண்டை தழுவி, வண்டே முரலும்
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய்! பிணி மேய்ந்து இருந்த
இருகால் குரம்பை இது நான் உடையது; இது பிரிந்தால்,
தருவாய், எனக்கு உன் திருவடிக்கீழ் ஓர் தலைமறைவே!
|
2
|
நறுமணம் கமழும் பூக்களாலாகிய இண்டை மாலையைச் சூடி வண்டுகள் ஒலிக்க, பெருகுகின்ற கங்கை ஆறு வந்து பொருந்தியுள்ள சடைக் கற்றையை உடையவனே! பிணிகளால் உண்ணப் பட்டுக் கிடக்கும் இரு தூண்களாகிய இருகால்களை உடைய அடியேன் உடம்பாகிய குடிசை நீங்கினால் அடியேனுக்கு உன் திருவடிக் கீழ்த் தலைமறைவாய் இருக்க இருப்பிடம் அருளுவாயாக. | |
மூவா உருவத்து முக்கண் முதல்வ! மிக்கு ஊர் இடும்பை
காவாய்! என, கடை தூங்கு மணியைக் கையால் அமரர்
நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை; அப்பால்
தீ ஆய் எரிந்து பொடி ஆய்க் கழிந்த, திரிபுரமே.
|
3
|
என்றும் மூத்தல் இல்லாத வடிவத்தை உடைய முக் கண்ணனாகிய காரணனே! மிகுந்த துயரிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக என்று உன் இருப்பிடத்தின் வாசலில் தொங்கும் மணியைத் தேவர்கள் கையால் அதன் நாவில் அசைத்து எழுப்பிய ஒலி குறைந்து அழியுமுன் திரிபுரங்கள் நெருப்பில் எரிந்து சாம்பற் பொடியாய்ப் போய்விட்டன. | |
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே-வந்து அமரர் முன்நாள்
முந்திச் செழுமலர் இட்டு, முடி தாழ்த்து, அடி வணங்கும்
நந்திக்கு முந்து உற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே?
|
4
|
வந்து தேவர்கள் சந்நிதிக்கு முன் எய்திச் சிறந்த பூக்களைச் சமர்ப்பித்துத் தலையைத் தாழ்த்தித் திருவடிகளில் விழுந்து வணங்கும் சிவபெருமான் பக்கல் அடிமை செய்யாது நாளைப் பாழாக்கின நல்ல நெஞ்சமே! சென்ற பிறப்பில் செய்தனவாய் நம்மை விடாது பிணித்த பாவங்கள் இம்மையில் வந்து நமக்குப் பாவப் பயன்களை நல்கும் இந்நேரத்தில் அவை குறித்து வருந்துவதனால் பயன் யாது? | |
அந்தி வட்டத்து இளங்கண்ணியன், ஆறு அமர் செஞ்சடையான்,
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும்,- பொய் என்பனோ-
சந்தி வட்டச் சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே?
|
5
|
தன் தலையிலே ஓர் இளம் பிறையைச் சூடிய சங்கரன், ஊமத்தம் பூவைச்சூடி, உலகத்தார் தொழச் சுடுகாட்டில் சுடப் பட்ட பல மண்டை ஓடுகளையும் மாலையாக அணிந்து, பல வீட்டு வாயில்கள் தோறும் பிச்சைக்குத் திரிபவனாய், அடியேனுடைய தலையை விடுத்து இரவும் பகலும் பிரியாதவனாக உள்ளான். | |
| Go to top |
உன் மத்தகமலர் சூடி, உலகம் தொழச் சுடலைப்
பல்மத்தகம் கொண்டு, பல் கடைதோறும் பலி திரிவான்;
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான்
தன் மத்தகத்து ஒர் இளம்பிறை சூடிய சங்கரனே.
|
6
|
விண்ணுலகமெல்லாம் ஒலிக்கும் ஒலிவடிவினனே! நீக்கப்பட்ட பிரமன் தலை ஓட்டினை ஏந்திய கையினனே! வேதங்கள் தேடுகின்ற எந்தையே! எங்கள் மேம்பட்டவனே! இடையிலே கோவண உடை உடுத்து, பிச்சை ஏற்று வாழும் நீ பார்வதியை மணந்து கொண்ட செயல் என்ன குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு? உன்னைக் குறை கூறுகின்றவர்கள் குறை கூறுதற்கு ஏற்ற செயல்களையே நீ செய்கின்றாய். | |
அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள்; ஐயம் உணல்;
வரைப்பாவையைக் கொண்டது எக் குடிவாழ்க்கைக்கு? வான் இரைக்கும்
இரைப்பா! படுதலை ஏந்து கையா! மறை தேடும் எந்தாய்!ப்பார் உரைப்பனவே செய்தியால்-எங்கள் உத்தமனே!
|
7
|
பற்றற விட்டொழிப்பதற்கு எளியதல்லாத இவ் வுடம்பை விடுத்துக்கொடிய காலதூதருடைய செயல்களால் இறப்பேன். இறந்தால் மேலுலகம் அடைவேன். மேலுலகம் ஏறிவந்து நிலவுலகிற்கு இறங்கி மீண்டும் பிறப்பேன். பிறந்தால் பிறைச்சந்திரனை அணிந்த நீண்ட சடையை உடைய தலைக்கோலத்தை அணிந்த பெருமானுடைய பெயரை மறந்து விடுவேனோ என்று என் உள்ளம் கிடந்து வருந்துகின்றது. | |
துறக்கப்படாத உடலைத் துறந்து வெந் தூதுவரோடு
இறப்பன்; இறந்தால், இரு விசும்பு ஏறுவன்; ஏறி வந்து
பிறப்பன்; பிறந்தால், பிறை அணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர்
மறப்பன் கொலோ? என்று, என் உள்ளம் கிடந்து மறுகிடுமே.
|
8
|
தேன் பெருக்கெடுத்தோடும் நறுமணம் கமழும் கொன்றைமலரைச் சூடிப் பாவமில்லாதவனாகிய இறைவன் உலகியல் செய்திகள் யாவும் கலந்து கிடக்கும் அடியேனுடைய உள்ளத்துப் புகுந்தான். அவன் திருமுடி அதன் மேல் வெள்ளமாய் வரும் நீரை உடைய கங்கை இவற்றால் தன் இயக்கம் தடைப்பட இளைய பிறை சடைப் புறமிருந்து திரும்பி ஏரி போன்ற நீர் நிறைந்த கங்கையில் தோய்ந்து கிடக்கிறது. | |
வேரி வளாய விரைமலர்க்கொன்றை புனைந்து, அனகன்,
சேரி வளாய என் சிந்தை புகுந்தான்; திருமுடிமேல்
வாரி வளாய வருபுனல் கங்கைசடை மறிவு ஆய்,
ஏரி வளாவிக் கிடந்தது போலும், இளம்பிறையே.
|
9
|
நெடுங்காலம் மலைகள் மழையின்றிச் சூடேறக் கரிய கடலின் நீர் சுருங்குமாறு பல ஆண்டுகள் மழை பெய்யாது போயினும் பஞ்சம் ஏற்படுமே என்று அஞ்சாதே. என்னிடம் வஞ்சினம் கூறும் மனமே! எல்லா உயிர்க்கும் புகலிடமாகிய இச்சிவ பூமியிலே இமையாத முக்கண்களை உடைய பொன் மயமான நெடிய குன்றம் ஒன்று உள்ளது ஆதலின் அடியவர்கள் வருந்த வேண்டிய தேவை இல்லை. | |
கல்-நெடுங்காலம் வெதும்பி, கருங்கடல் நீர் சுருங்கி,
பல்-நெடுங்காலம் மழைதான் மறுக்கினும், பஞ்சம் உண்டு என்று
என்னொடும் சூள் அறும்-அஞ்சல்!-நெஞ்சே! இமையாத முக்கண்
பொன்நெடுங்குன்றம் ஒன்று உண்டுகண்டீர், இப் புகல் இடத்தே.
|
10
|
பிரமன் மேலே அன்ன வடிவிற் சென்று பெருமா னுடைய முடியை அறிந்தான் அல்லன். கீழே தோண்டிச் சென்று திரு மால் மனக்கலக்கம் உற்றானே அன்றிப் பெருமானுடைய திருவடி களைக் கண்டான் அல்லன். சிவபெருமானை வழிபட்டுக் கொண்டி ருந்த இளையவனான மார்க்கண்டேயன் பால் சென்று அவன் மீது பாசக்கயிற்றை வீசி எறிந்து செயற்படாமல் மடங்கிய மனத்தை உடைய கூற்றுவன் பிரமனாலும் திருமாலாலும் அறிய முடியாத சிவ பெருமானுடைய கழல்களை அணிந்த திருவடிகளை அறியும் வாய்ப்பினைப் பெற்றான். அத்திருவடிகள் வாழ்க. | |
| Go to top |
மேலும் அறிந்திலன், நான்முகன் மேல் சென்று; கீழ் இடந்து
மாலும் அறிந்திலன்; மால் உற்றதே; வழிபாடு செய்யும்
பாலன் மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்
காலன் அறிந்தான், அறிதற்கு அரியான் கழல் அடியே!
|
11
|