சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர் அந்திவான் நிறத்தான், அணி ஆர் மதி முந்திச் சூடிய முக்கண்ணினான், அடி வந்திப்பார் அவர் வான் உலகு ஆள்வரே.
|
1
|
அண்டம் ஆர் இருள் ஊடு கடந்து உம்பர் உண்டுபோலும், ஓர் ஒண்சுடர்; அச் சுடர் கண்டு இங்கு ஆர் அறிவார்? அறிவார் எலாம், வெண் திங்கள் கண்ணி வேதியன் என்பரே.
|
2
|
ஆதி ஆயவன், ஆரும் இலாதவன், போது சேர் புனை நீள் முடிப் புண்ணியன் பாதி பெண் உருஆகி, பரஞ்சுடர்ச்- சோதியுள் சோதிஆய், நின்ற சோதியே.
|
3
|
இட்டது, இட்டது-ஓர் ஏறு உகந்து ஏறி ஊர் பட்டி துட்டங்கனாய்ப்-பலி தேர்வது ஓர் கட்ட வாழ்க்கையன் ஆகிலும், வானவர், அட்டமூர்த்தி, அருள்! என்று அடைவரே.
|
4
|
ஈறு இல் கூறையன் ஆகி, எரிந்தவெண்- நீறு பூசி நிலாமதி சூடிலும், வீறு இலாதன செய்யினும், விண்ணவர், ஊறலாய், அருளாய்! என்று உரைப்பரே.
|
5
|
Go to top |
உச்சி வெண்மதி சூடிலும், ஊன் அறாப் பச்சை வெண்தலை ஏந்திப் பல இலம் பிச்சையே புகும் ஆகிலும், வானவர், அச்சம் தீர்த்து அருளாய்! என்று அடைவரே.
|
6
|
ஊர் இலாய்! என்று, ஒன்று ஆக உரைப்பது ஓர் பேர் இலாய்! பிறை சூடிய பிஞ்ஞகா! கார் உலாம் கண்டனே! உன் கழல் அடி சேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே.
|
7
|
எந்தையே! எம்பிரானே! என உள்கிச் சிந்திப்பார் அவர் தீவினை தீருமால்; வெந்தநீறு மெய் பூசிய வேதியன் அந்தமா அளப்பார், அடைந்தார்களே.
|
8
|
ஏன வெண்மருப்போடு என்பு பூண்டு, எழில் ஆனை ஈர் உரி போர்த்து, அனல் ஆடிலும்; தான் அவ்(வ்)வண்ணத்தன் ஆகிலும்; தன்னையே வான நாடர் வணங்குவர், வைகலே.
|
9
|
ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணும் ஆம் மெய்யன், மேதகு வெண்பொடிப் பூசிய மை கொள் கண்டத்தன், மான்மறிக் கையினான் பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே.
|
10
|
Go to top |
ஒருவன் ஆகி நின்றான், இவ் உலகுஎலாம்; இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான்; அரு அரா அரை ஆர்த்தவன்; ஆர் கழல் பரவுவார் அவர் பாவம் பறையுமே.
|
11
|
ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும், நாதனே, அருளாய்! என்று நாள்தொறும் காதல் செய்து கருதப்படுமவர் பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
|
12
|
ஒளவ தன்மை அவர் அவர் ஆக்கையான்; வெவ்வ தன்மையன் என்பது ஒழிமினோ! மௌவல் நீள் மலர்மேல் உறைவானொடு பௌவ வண்ணனும் ஆய்ப் பணிவார்களே.
|
13
|
அக்கும் ஆமையும் பூண்டு, அனல் ஏந்தி, இல் புக்கு, பல்பலி தேரும் புராணனை- நக்கு, நீர்கள், நரகம் புகேன்மினோ!- தொக்க வானவரால்-தொழுவானையே.
|
14
|
கங்கை தங்கிய செஞ்சடைமேல் இளன் திங்கள் சூடிய தீநிற-வண்ணனார்; இங்கணார், எழில் வானம் வணங்கவே; அம் கணாற்கு அதுவால், அவன் தன்மையே!
|
15
|
Go to top |
ஙகர வெல் கொடியானொடு,-நன்நெஞ்சே!- நுகர, நீ உனைக் கொண்டு உய்ப் போக்கு உறில், மகர வெல் கொடி மைந்தனைக் காய்ந்தவன் புகர் இல் சேவடியே புகல் ஆகுமே.
|
16
|
சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ? கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின், மரணம் எய்தியபின், நவை நீக்குவான் அரணம் மூ எயில் எய்தவன் அல்லனே?
|
17
|
ஞமன் என்பான், நரகர்க்கு; நமக்கு எலாம் சிவன் என்பான்; செழு மான்மறிக் கையினான்; கவனம் செய்யும் கன விடைஊர்தியான் தமர் என்றாலும், கெடும், தடுமாற்றமே.
|
18
|
இடபம் ஏறியும் இல் பலி ஏற்பவர்; அடவி காதலித்து ஆடுவர்; ஐந்தலைப் பட அம்பாம்பு அரை ஆர்த்த பரமனை, கடவிராய்ச் சென்று, கைதொழுது உய்ம்மினே!
|
19
|
இணர்ந்து கொன்றை பொன்தாது சொரிந்திடும், புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன் அணைந்த, அம் சடையான் அவன் பாதமே உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே.
|
20
|
Go to top |
தருமம் தான், தவம் தான், தவத்தால் வரும் கருமம் தான் கருமான்மறிக் கையினான்; அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ!- சிரமம் சேர் அழல்-தீவினையாளரே!
|
21
|
நமச்சிவாய என்பார் உளரேல், அவர்- தம் அச்சம் நீங்கத் தவநெறி சார்தலால், அமைத்துக் கொண்டது ஓர் வாழ்க்கையன் ஆகிலும், இமைத்து நிற்பது சால அரியதே.
|
22
|
பல்பல் காலம் பயிற்றி, பரமனைச் சொல் பல்-காலம் நின்று, ஏத்துமின்! தொல்வினை வெற்பில்-தோன்றிய வெங்கதிர் கண்ட அப் புல்பனி(க்) கெடும் ஆறு அது போலுமே.
|
23
|
மணி செய் கண்டத்து, மான்மறிக் கையினான்; கணிசெய் வேடத்தர் ஆயவர்; காப்பினால் பணிகள்தாம் செய வல்லவர் யாவர், தம் பிணி செய் ஆக்கையை நீக்குவர்; பேயரே!
|
24
|
இயக்கர், கின்னரர், இந்திரன், தானவர், நயக்க நின்றவன்; நான்முகன் ஆழியான் மயக்கம் எய்த, வல் மால் எரி ஆயினான்; வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே.
|
25
|
Go to top |
அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப் பரவுவார் அவர் பாவம் பறைதற்கு, குரவை கோத்தவனும், குளிர்போதின்மேல் கரவு இல் நான்முகனும், கரி அல்லரே.?
|
26
|
அழல் அங்கையினன்; அந்தரத்து ஓங்கி நின்று உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான் தழலும் தாமரையானொடு, தாவினான், கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே.
|
27
|
இளமை கைவிட்டு அகறலும், மூப்பினார், வளமை போய், பிணியோடு வருதலால், உளமெலாம் ஒளி ஆய் மதி ஆயினான் கிளமையே கிளை ஆக நினைப்பனே.
|
28
|
தன்னில்-தன்னை அறியும் தலைமகன் தன்னில்-தன்னை அறியில்-தலைப்படும்; தன்னில்-தன்னை அறிவு இலன் ஆயிடில், தன்னில்-தன்னையும் சார்தற்கு அரியனே.
|
29
|
இலங்கை மன்னனை ஈர்-ஐந்து-பத்தும்-அன்று அலங்கலோடு உடனே செல ஊன்றிய நலம் கொள் சேவடி நாள்தொறும் நாள்தொறும் வலம்கொண்டு ஏத்துவார் வான் உலகு ஆள்வரே.
|
30
|
Go to top |