சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.029   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாரூர் - திருத்தாண்டகம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=Gs8cErbLXSY   Add audio link Add Audio

திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை, தீம்கரும்பின், இன்சுவையை, தெளிந்த தேறல்,
குருமணியை, குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை,
பரு மணியை, பவளத்தை, பசும்பொன், முத்தை, பருப்பதத்தில் அருங்கலத்தை, பாவம் தீர்க்கும்
அருமணியை, ஆரூரில் அம்மான்தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

1
செல்வம் தரும் சிந்தாமணியாய் , இனிக்கும் தேன் , பால் , கருப்பஞ்சாறு , தெளிவாகிய அமுதம் போன்றவனாய்ச் சிறந்த ஆசிரியனாய் , குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரை சச்சரி இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்துபவனாய் , எங்கும் கிட்டுதற்கு அரிய பெரிய இரத்தினம் பவளம் முத்து கிளிச்சிறை என்ற பொன் போன்றவனாய்ச் சீசைலத்தின் விலைமிக்க அணிகலனாய் , பாவத்தைப் போக்கும் அரிய மாணிக்கமாய் உள்ள ஆரூர்ப் பெருமானை இதுகாறும் அறியாது நாய் போன்ற , அவன் அடியேன் மறந்திருந்தவாறு கொடியது .

பொன்னே போல்-திருமேனி உடையான்தன்னை, பொங்கு வெண்நூலானை, புனிதன்தன்னை,
மின்னானை, மின் இடையாள் பாகன்தன்னை, வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான்தன்னை,
தன்னானை, தன் ஒப்பார் இல்லாதானை, தத்துவனை, உத்தமனை, தழல் போல் மேனி
அன்னானை, ஆரூரில் அம்மான்தன்னை- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

2
பொன்னார் மேனியனை , வெண்ணூல் அணிந்த புனிதனாய் ஒளி வீசுவானை , பார்வதிபாகனை , யானைத்தோல் போர்வையனைத் , தன்வயம் உடையவனைத் தன்னை ஒப்பார் பிறர் இல்லாதவனை , மெய்ப்பயனை , மேம்பட்டவனை , தழல்போன்ற செந்நிற மேனியனை - இவ்வாறெல்லாம் மனக் கண்ணுக்குக் காட்சி வழங்கும் ஆரூர்த் தலைவனை இதுகாறும் அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

ஏற்றானை, ஏழ் உலகும் ஆனான்தன்னை, ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்தன்னை,
கூற்றானை, கூற்றம் உதைத்தான்தன்னை,
கொடுமழுவாள் கொண்டது ஓர் கையான்தன்னை,
காற்றானை, தீயானை, நீரும் ஆகி, கடி கமழும்   புன்சடைமேல் கங்கைவெள்ள-
ஆற்றானை, ஆரூரில் அம்மான்தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

3
இடபவாகனனாய் , ஏழ்கடலும் ஏழ்மலையும் ஏழுலகும் ஆகிப் பரந்திருப்பவனாய்க் கூற்றுவனாய்த் தருமராசருடைய ஏவலனான கூற்றை உதைத்தவனாய் , மழுப்படை ஏந்திய கையனாய் , காற்றும் தீயும் நீருமாகி நறுமணம் கமழும் செஞ்சடைமேல் கங்கையைத் தரித்தவனாய் உள்ள , ஆரூரிலுள்ள , அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

முந்திய வல்வினைகள் தீர்ப்பான்தன்னை, மூவாத மேனி முக்கண்ணினானை,
சந்திரனும் வெங்கதிரும் ஆயினானை,   சங்கரனை, சங்கக் குழையான்தன்னை,
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்தன்னை, மறுமையும் இம்மையும் ஆனான்தன்னை,
அம் திரனை, ஆரூரில் அம்மான்தன்னை, -அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

4
முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட கொடிய வினைகளைத் தீர்ப்பவனாய் , மூப்படையாத் திருமேனியில் மூன்று கண்கள் உடையவனாய்ச் சந்திரனும் சூரியனும் ஆகியவனாய் , எல்லோருக்கும் நன்மை செய்பவனாய் , சங்கினாலாகிய காதணியை உடையவனாய் , மந்திரமும் வேதத்தின் பொருளும் மறுமையும் இம்மையுமாய் அழகுநிலை பெற்றிருக்கும் ஆரூரிலுள்ள அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

பிற நெறி ஆய், பீடு ஆகி, பிஞ்ஞகனும் ஆய், பித்தனாய், பத்தர் மனத்தினுள்ளே
உற நெறி ஆய், ஓமம் ஆய், ஈமக்காட்டில், ஓரிபல விட, நட்டம் ஆடினானை;
துறநெறி ஆய், தூபம் ஆய், தோற்றம் ஆகி, நாற்றம் ஆய், நல் மலர்மேல் உறையா நின்ற
அறநெறியை; ஆரூரில் அம்மான்தன்னை;- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

5
பிறக்கும் வழிகளாகவும் , பெருமையாகவும் , தலைக்கோலம் அணிந்தவனாகவும் , பித்தனாகவும் , அடியவர்கள் உள்ளத்தில் உறவுதரும் வழியாகவும் , வேள்வியாகவும் அமைந்து , சுடுகாட்டிலுள்ள நரிகள் அஞ்சி ஓடக் கூத்தாடுபவனாய்த் துறவு நெறியாகவும் புகையாகவும் காட்சி வழங்கிப் பூவில் நறுமணம் போல உலகெங்கும் பரந்துள்ளவனாய் உள்ள அறநெறியை அறிவித்த ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .
Go to top

பழகிய வல்வினைகள் பாற்றுவானை, பசுபதியை, பாவகனை, பாவம் தீர்க்கும்
குழகனை, கோள் அரவு ஒன்று ஆட்டுவானை, கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்தன்னை,
விழவனை, வீரட்டம் மேவினானை, விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை,
அழகனை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

6
பழக்கத்தினால் ஏற்படும் வருவினையை அழிப்பவனாய் , ஆன்மாக்களுக்குத் தலைவனாய் , அக்கினித் தேவனாய்ப் பாவங்கள் போக்கும் இளையவனாய் , பாம்பினை ஆட்டுபவனாய்க் கொடுகொட்டிப்பறையைக் கையில் கொண்டவனாய் , விழாக்களில் மேவி இருப்பவனாய் , வீரட்டத்தில் உறைபவனாய்த் தேவர்கள் துதித்து விரும்பும் அழகனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே .

சூளாமணி சேர் முடியான்தன்னை, சுண்ணவெண்நீறு அணிந்த சோதியானை,
கோள் வாய் அரவம் அசைத்தான்தன்னை, கொல் புலித் தோல் ஆடைக் குழகன் தன்னை,
நாள் வாயும் பத்தர் மனத்து உளானை, நம்பனை, நக்கனை, முக்கணானை,
ஆள்வானை, ஆரூரில் அம்மான்தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

7
சூளாமணியை அணிந்த முடியை உடையவனாய் , திருநீறு தரித்த ஒளியினனாய் , கொடிய பாம்பினை , இடையில் இறுக்கிக் கட்டியவனாய்ப் புலித்தோல் ஆடையை அணிந்த இளையவனாய் , எப்பொழுதும் அடியவர் உள்ளத்தில் இருந்து அவரால் விரும்பப்படுபவனாய் , ஆடை அற்றவனாய் , முக்கண்ணனாய் , எல்லோரையும் ஆள்பவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

முத்தினை, மணிதன்னை, மாணிக்கத்தை, மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னை,
கொத்தினை, வயிரத்தை, கொல் ஏறு ஊர்ந்து கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்தன்னை,
பத்தனை, பத்தர் மனத்து உளானை, பரிதி போல்-திருமேனி உடையான்தன்னை,
அத்தனை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது   அடிநாயேன் அயர்த்த ஆறே!.

8
முத்து , மணி , மாணிக்கம் , என்றும் மூப்படையாத கற்பகத்தின் கொழுந்து , வயிரம் இவற்றை வைத்துக் கோத்த மாலை போல்வானாய்க் காளையை இவர்ந்து பாம்பாட்டும் இளையவனாய் , எல்லோரிடத்தும் அன்புடையவனாய் , பக்தர்கள் மனத்தில் நிலைத்து இருப்பவனாய் , சூரியனைப் போல ஒளி வீசும் திருமேனியை உடையவனாய் , எல்லோருக்கும் தலைவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

பை ஆடு அரவம் கை ஏந்தினானை, பரிதி போல்-திருமேனிப் பால்நீற்றானை,
நெய் ஆடு திருமேனி நிமலன்தன்னை, நெற்றிமேல் மற்றொரு கண் நிறைவித்தானை,
செய்யானை, செழும் பவளத்திரள் ஒப்பானை, செஞ்சடைமேல் வெண்திங்கள் சேர்த்தினானை,
ஐயாறு மேயானை, ஆரூரானை,-அறியாது   அடிநாயேன் அயர்த்த ஆறே!.

9
படமெடுத்தாடும் பாம்பைக் கையில் ஏந்தியவனாய்ச் சூரியனைப் போலச் சிவந்த மேனியில் பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவனாய் , நெய் அபிடேகம் செய்த திருமேனியை உடைய தூயவனாய் , நெற்றியில் மூன்றாவது கண் உடையவனாய்ச் செழும்பவளத்திரள் போன்ற செந்நிறத்தினனாய்ச் செஞ்சடையில் வெண்பிறை சூடியவனாய்த் திருவையாற்றை உகந்தருளியிருப்பவனான ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

சீர் ஆர் முடிபத்து உடையான்தன்னைத் தேசு அழியத் திருவிரலால் சிதைய நூக்கிப்
பேர் ஆர் பெருமை கொடுத்தான்தன்னை, பெண் இரண்டும் ஆணும் ஆய் நின்றான் தன்னை,
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை, வெண்நீறு அணிந்தான்தன்னை,
ஆரானை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

10
அழகிய பத்துத் தலைகளை உடைய இராவணனை அவன் புகழ் அழியுமாறு கால்விரலால் உடல் சிதைய வருத்திப் பிறகு அவனுக்கு அந்தப் பெயருக்கு ஏற்ப எல்லாரையும் அழச்செய்பவன் என்ற பெருமையைக் கொடுத்தானாய்ப் பார்வதி கங்கை என்ற பெண்பாலர் இருவரைக் கொண்ட ஆண்வடிவு உடையவனாய்ப் போரிட்ட திரிபுரங்கள் அழியுமாறு சாம்பலாக்கிய புண்ணியனாய் , வெண்ணீறு அணிந்தானாய் , அடியவர்களுக்குத் தெவிட்டாதவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாரூர்
1.091   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
1.105   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
2.079   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
2.101   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
3.045   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.021   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.101   திருநாவுக்கரசர்   தேவாரம்   குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்   (திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
4.102   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.025   திருநாவுக்கரசர்   தேவாரம்   உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.026   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாதித் தன் திரு உருவில்
Tune -   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.027   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற  
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.028   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.031   திருநாவுக்கரசர்   தேவாரம்   இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.032   திருநாவுக்கரசர்   தேவாரம்   கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.034   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
7.008   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.012   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்   (திருவாரூர் )
7.033   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி   (திருவாரூர் )
7.037   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.039   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருவாரூர் )
7.047   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்   (திருவாரூர் )
7.051   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.059   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.073   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.083   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.095   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
8.139   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி   (திருவாரூர் )
9.018   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா   பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -   (திருவாரூர் )
11.007   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை   திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -   (திருவாரூர் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000