நவகுண்ட மானவை நானுரை செய்யின் நவகுண்டத் துள்எழும் நற்றீபந் தானும் நவகுண்டத் துள்எழும் நன்மைகள் எல்லாம் நவகுண்ட மானவை நானுரைப் பேனே.
|
1
|
உரைத்திடுங் குண்டத்தி னுள்ளேமுக் காலும் வகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும் பகைத்திடு முப்புரம் பார் அங்கி யோடே மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.
|
2
|
மேலறிந் துள்ளே வெளிசெய்த அப்பொருள் காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர் பாரறிந் தண்டம் சிறகற நின்றது நானறிந் துள்ளுளே நாடிக்கண் டேனே.
|
3
|
கொண்டஇக் குண்டத்தினுள்ளெழு சோதியால் அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம் பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம் இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.
|
4
|
எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில் பதித்த கலைகளும் பாலித்து நிற்கும் கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.
|
5
|
Go to top |
கூடமுக் கூடத்தி னுள்ளெழு குண்டத்துள் ஆடிய ஐந்தும் அகம்புற மாய்நிற்கும் பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.
|
6
|
நற்சுட ராகும் சிரம் முக வட்டமாம் கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளில் பைச்சுடர் மேனி பதைப்பற்ற லிங்கமும் நற்சுடர் ராய்எழும் நல்லதென் றாளே.
|
7
|
நல்லதென் றாளே நமக் குற்ற நாயகம் சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா மெல்லநின் றாளை வினவகில் லாதவர் கல்லதன் தாளையும் கற்றும்வின் னாளே.
|
8
|
வின்னா இளம்பிறை மேவியகுண்டத்துச் சொன்னா இரண்டும் சுடர்நாகம் திக்கெங்கும் பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர் என்னாகத் துள்ளே இடங்கொண்ட வாறே.
|
9
|
இடங் கொண்ட பாதம் எழிற்சுட ராக நடங்கொண்ட பாதம்நன் னீராம் அவற்குச் சகங்கொண்ட கைஇரண் டாறும் தழைப்ப முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.
|
10
|
Go to top |
முக்கணன் றானே முழுச்சுட ராயவன் அக்கணன் றானே அகிலமும் உண்டவன் திக்கண னாகி திசைஎட்டும் கண்டவன் எக்கணன் றன்னுக்கும் எந்தை பிரானே.
|
11
|
எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னமே சண்முகன் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால் மைந்தன் இவனென்று மாட்டுக்கொள் ளீரே.
|
12
|
மாட்டிய குண்டத்தி னுள்எழு வேதத்துள் ஆட்டி கால்ஒன் றிரண்டும் அலர்ந்திடும் வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ நாட்டுஞ் சுரர்இவர் நல்லொளி யானே.
|
13
|
நல்லொளி யாக நடந்துல கெங்கும் கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும் சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம் கல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.
|
14
|
நின்றஇக் குண்ட நிலைஆறு கோணமாய்ப் பண்டையில் வட்டம் பதைத்தெழும் ஆறாறுங் கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ விண்ணுளும் என்ன விடுக்கலும் ஆமே.
|
15
|
Go to top |
எடுக்கின்ற பாதங்கள் மூன்ற(து) எழுத்தைக் கடுத்த முகம் இரண் டாறுகண் ணாகப் படித்தெண்ணும் நாஏழு கொம்பொரு நாலு அடுத்தெழு கையான தந்தமி லாற்கே.
|
16
|
அந்தமி லானுக் ககலிடந் தானில்லை அந்தமி லானை அளப்பவர் தாமில்லை அந்தமி லானுக் கடுத்தசொல் தானில்லை அந்தமி லானை அறிந்துகொள் பத்தே.
|
17
|
பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை கட்டிட்டு நின்று கலந்தமெய் ஆகமும் பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.
|
18
|
பார்ப்பதி பாகன் பரந்தகை நாலஞ்சு காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும் பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி நாற்பது சோத்திர நல்லிருப் பத்தஞ்சே.
|
19
|
அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும் மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங் கிருத்தலால் பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர் கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.
|
20
|
Go to top |
முத்திநற் சோதி முழுச்சுட ராயவன் கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும் பற்றற்று நாடிப் பரந்தொளி யூடுபோய்ச் செற்றற் றிருந்தவர் சேர்ந்திருந் தாரே.
|
21
|
சேர்ந்த கலைகளும் சேரும்இக் குண்டமும் ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும் பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக் காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.
|
22
|
மெய்கண்ட மாம்விரி நீர்உல கேழையும் உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின் செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள் பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.
|
23
|
கலந்திரு பாதம் இருகர மாகும் அலர்ந்திரு குண்டம் அகாரத்தோர் மூக்கு மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி உலர்ந்திருங் குஞ்சி அங் குத்தம னார்க்கே.
|
24
|
உத்தமன் சோதி உளன்ஒரு பாலனாய் மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும் பச்சிம திக்கும் பரந்து குழிந்தன சத்திமா னாகத் தழைத்த கொடியே.
|
25
|
Go to top |
கொடிஆறு சென்று குலாவிய குண்டம் அடிஇரு கோணமாய் அந்தமும் ஒக்கும் படிஏ ழுலகும் பரந்த சுடரை மடியாது கண்டவர் மாதன மாமே.
|
26
|
மாதன மாக வளர்கின்ற வன்னியைச் சாதனமாகச் சமைந்த குருஎன்றும் போதன மாகப் பொருந்த உலகாளும் பாதன மாகப் பிரிந்தது பார்த்தே.
|
27
|
பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார்இல்லை காத்துட லுள்ளே கருதி யிருந்தவர் மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.
|
28
|
உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க அகங்கண்ட யோகிஉள் நாடி எழுப்பும் பகங்கண்டு கொண்டஅப் பாய்கரு ஒப்பச் சகங்கண்டு கொண்டது சாதன மாமே.
|
29
|
சாதனை நாலு தழல் மூன்று வில்வயம் வேதனை வட்டம் விளைவாறு பூநிலை போதனை போ(து) அஞ்சு பொற்கய வாரணம் நாதனை நாடும் நவகோடி தானே. 5,
|
30
|
Go to top |