அளந்தேன் அகலிடத் தந்தமுன் ஈறும் அளந்தேன் அகலிடத் தாதிப் பிரானை அளந்தேன் அகலிடத் தாணொடு பெண்ணும் அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.
|
1
|
உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள் கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.
|
2
|
கும்பக் களிறைந்தும் கோலொடு பாகனும் வம்பில் திகழும் மணிமுடி வள்ளலும் இன்பக் கலவி இனிதுறை தையலும் இன்பக் கலவியுள் இன்பமுற் றாரே.
|
3
|
இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர் அன்பிற் புகவல்ல னாம் எங்கள் அப்பனும் துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள் என்பிற் பராசத்தி என்னம்மை தானே.
|
4
|
என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கற்று உன் அம்மை ஊழித் தலைவன் அங்குளன் மன் அம்மை யாகி மருவி உரைசெய்யும் பின் அம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.
|
5
|
Go to top |
தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன் பார்மேல் இருப்ப தொருநூறு தானுள பூமேல் உறைகின்ற போதகி வந்தனள் நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.
|
6
|
ஆணைய மாய்வருந் தாதுள் இருந்தவர் மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின் பாணைய மாய பரத்தை அறிந்தபின் தாணைய மாய தனாதனன் தானே.
|
7
|
தானே எழுந்தஇத் தத்துவ நாயகி வானேர் எழுந்து மதியை விளக்கினள் தேனேர் எழுகின்ற தீபத் தொளியுடன் மானே நடமுடை மன்றறி யீரே.
|
8
|
அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத் தறிவான மங்கை அருளது சேரின் பிறியா அறிவறி வாருளம் பேணும் நெறியாய சித்தம் நினைந்திருந் தாளே.
|
9
|
இரவும் பகலும் இலாத இடத்தே குரவஞ்செய் கின்ற குழலியை நாடி அரவஞ்செய் யாமல் அவளுடன் தூங்கப் பருவஞ்செய் யாததோர் பாலனும் ஆமே.
|
10
|
Go to top |
பாலனு மாகும் பராசத்தி தன்னொடு மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட மூலம தாம்எனும் முத்திக்கு நேர்படச் சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.
|
11
|
நின்ற பராசத்தி நீள்பரன் றன்னொடு நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும் நன்றறி யுங்கிரி யாசத்தி நண்ணவே மன்றன் அவற்றுள் மருவிநின் றானே.
|
12
|
மருவொத்த மங்கையும் தானும் உடனே உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார் கருவொத்து நின்று கலக்கின்ற போது திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.
|
13
|
சிந்தையி னுள்ளே திரியும் சிவசத்தி விந்துவும் நாதமும் மாயே விரிந்தனள் சந்திர பூமி சடாதரி சாத்தவி அந்தமும் ஆதியும் ஆம்வன்னத் தாளே.
|
14
|
ஆறி யிருந்த அமுத பயோதரி மாறி யிருந்த வழிஅறி வார்இல்லை தேறி யிருந்துநல் தீபத் தொளியுடன் ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.
|
15
|
Go to top |
உடையவன் அங்கி உருத்திர சோதி விடையவன் ஏறி விளங்கி யிருக்கும் கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத் தடையது வாகிய சாதகர் தாமே.
|
16
|
தாமேல் உறைவிடம் ஆறித ழானது பார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுள பூமேல் உறைகின்ற புண்ணியை வந்தனள் பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.
|
17
|
பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத் திண்கொடி யாகித் திகழ்தரு சோதியாம் விண்கொடி யாகி விளங்கி வருதலால் பெண்கொடி யாக நடந்த துலகே.
|
18
|
நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய் இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய் படர்ந்தது தன்வழிப் பங்கயத் துள்ளே தொடர்ந்தது உள்வழிச் சோதி அடுத்தே.
|
19
|
அடுக்கின்ற தாமரை ஆதி இருப்பிடம் எடுக்கின்ற தாமரை இல்லகத் துள்ளது மடுக்கின்ற தாமரை மத்தகத் தேசெல முடுக்கின்ற தாமரை முற்சது ரத்ததே.
|
20
|
Go to top |
முற்சது ரத்தே எழுந்த முளைச்சுடர் எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக் கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற எச்சது ரத்தும் இருந்தனள் தானே.
|
21
|
இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய் பரந்தன வாயு திசைதிசை தோறும் குவிந்தன முத்தின் முகம்ஒளி நோக்கி நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.
|
22
|
அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மனி கொம்பன்ன நுண்ணிடைக் கோதை குலாவிய செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும் நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.
|
23
|
நவிலும் பெருந்தெய்வம் நான்மறை சத்தி துகிலுழை யாடை நிலம்பொதி பாதம் அகிலமும் அண்டம் முழுதும்செம் மாந்து புகலும்முச் சோதி புனையநிற் பாளே.
|
24
|
புனையவல் லாள்புவ னத்திறை எங்கள் வனையவல் லாள்அண்ட கோடிகள் உள்ளே புனையவல் லாள்புவ னத்தொளி தன்னை புனையவல் லாளையே போற்றியென் பேனே.
|
25
|
Go to top |
போற்றிஎன் பேன் புவனாபதி அம்மை என் ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை கூற்றந் துரக்கின்ற கோட்பைந் தொடியே.
|
26
|
தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தர வடிவார் திரிபுரையாம் மங்கை சங்கைச் செடியார் வினைகெடச் சேர்வரை என்றென் அடியார் வினைகெடுத் தாதியு மாமே.
|
27
|
மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி புல்லிசைப் பாவையைப் போகத் துரந்திட்டு வல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே.
|
28
|
தாவித்த அப்பொருள் தான் அவன் எம்மிறை பாவித் துலகம் படைக்கின்ற காலத்து மேவிப் பராசத்தி மேலொடு கீழ்தொடர்ந் தாவிக்கு மப்பொரு ளானது தானே.
|
29
|
அதுஇது என்பார் அவனை அறியார் கதிவர நின்றதோர் காரணம் காணார் மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை திதமது உன்னார்கள் தேர்ந்தறி யாரே. 8,
|
30
|
Go to top |