ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும் சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை ககாராதி மூவித்தை காமிய முத்தியே.
|
1
|
ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத் தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள் வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும் தேரில் அறியும் சிவகாயந் தானே.
|
2
|
ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே ஏகம் பராசத்தி யாகச் சிவன்உரு யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.
|
3
|
எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக் கட்டாகும் நாதாந்தத் தெட்டும் கலப்பித்த (து) ஒட்டாத விந்துவும் தான்அற் றொழிந்தது கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.
|
4
|
ஏதும் பலமாம் இயந்திரரா சன்னடி ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச் சாதங் கெடச் செம்பில் சட்கோணந் தான்இடே.
|
5
|
Go to top |
சட் கோணந் தன்னில் சிரீம்இரீம் தானிட்டு அக்கோணம் ஆறின் தலையில்இரீங் காரம்இட் டெக்கோண முஞ்சூழ் எழில்வட்டம் இட்டுப்பின் மிக்கீரெட் டக்கரம் அம்முதல் மேல்இடே.
|
6
|
இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே அட்டஹவ் விட்டிட் டதன்மேலே உவ்விட்டுக் கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம் இட்டுவா மத் (து) ஆம் கிரோம்என் மேவிடே.
|
7
|
மேவிய சக்கர மீது வலத்திலே கோவை யுடைய குரோம்சிரோம் என்றிட்டுத் தாவில் இரீங்காரத் தால்சக் கரஞ்சூழ்ந்து பூவை புவனா பதியைப்பின் பூசியே.
|
8
|
பூசிக்கும் போது புவனா பதிதன்னை ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப் பேசிப் பிராணப்பிர திட்டை யதுசெய்து தேசுற் றிடவே தியான மதுசெய்யே.
|
9
|
செய்ய திருமேனி செம்பட் டுடைதானும் கையில் படைஅங் குசபாசத் தோடபயம் மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி துய்ய முடியும் அவயவத் தோற்றமே.
|
10
|
Go to top |
தோற்போர்வை நீக்கித் துதித்தடைவில் பூசித்துப் பாற்போ னகம்மந் திரத்தால் பயின்றேத்தி நாற்பால \"நாரதா யைசுவா கா` என்று சீர்ப்பாகச் சேடத்தை மாற்றியபின் சேவியே.
|
11
|
சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாபனத்தால் பாவித் திதய கமலம் பதிவித்தங் கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை நீவைத்துச் சேமி நினைந்த தருமே.13,
|
12
|