தற்பதம்தொம்பதம் தானாம் அசிபதம் தொற்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே நிற்பது உயிர்பரம் நிகழ்சிவ மும் மூன்றின் சொற்பத மாகும் தொந்தத் தசியே.
|
1
|
தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி தொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதி வந்த மலம்குணம் மாளல் சிவம் தோன்ற இந்துவின் முன்இருள் நீங்குதல் ஒக்குமே.
|
2
|
தொந்தத் தசிய வாசியில் தோற்றியே அந்த முறைஈரைந் தாக மதித்திட்டு அந்த மிலாத அவத்தைஅவ் வாக்கியத்(து) உந்து முறையில் சிவ முன்வைத் தோதிடே.
|
3
|
வைத்துச் சிவத்தை மதிசொரூ பானந்தத்து உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து அத்தற் கடிமை அடைந்துநின் றாயே.
|
4
|
தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம் அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம் நம்புறு சாந்தியில் நண்ணும் அவ்வாக்கிய உம்பர் உரைதொந்தத் தசி வா சியாவே.
|
5
|
Go to top |
ஆகிய அச்சோயம் தேவதத் தின்இடத்து ஆகி யவைவிட்டால் காயம் உபாதானம் ஏகிய தொம் `தத் தசி` என்ப மெய்யறி வாகிய சீவன் பரசிவ னாமே.
|
6
|
தாமத காமிய மாதி தகுகுணம் ஆம்மலம் மூன்றும் அகரா உகாரத்தோடு ஆம்அறும் அவ்வும்உவ்வும் மவ்வாய் உடல்மூன்றினில் தாம்ஆம் துரியமும் தொம்தத் தசியதே. 27,
|
7
|