பரகதி உண்டென்ன இல்லை என் போர்கள் நரகதி செல்வது ஞாலம் அறியும் இரகதி செய்திடு வார்கடை தோறும் துரகதி உண்ணத் தொடங்குவர் தாமே.
|
1
|
பறப்பட்டுப் போகும் புகுதும்என் நெஞ்சில் திறப்பட்ட சிந்தையைத் தெய்வம்என் றெண்ணி அறப்பட் டமரர் பதி யென் றழைத்தேன் இறப்பற்றி னேன் இதிங் கென்னென்கின் றானே.
|
2
|
திடலிடை நில்லாத நீர்போல ஆங்கே உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக் கடலிடை நில்லாக் கலம்சேரு மாபோல் அடல்எரி வண்ணனும் அங்குநின் றானே.
|
3
|
தாமரைநூல் போலவ தடுப்பார் பரத்தொடும் போம்வ வேண்டிப் புறத்தே உதர்வர் காண்வ காட்டக்கண் காணாக் கலதிகள் தீந்நெறிச் சென்று திரிகின்ற வாறே.
|
4
|
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன் காடும் மலையும் கழனி கடல்தொறும் ஊடும் உருவினை உன்னகி லாரே.
|
5
|
Go to top |
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் போவர் குடக்கும் குணக்கும் குறிவ நாவினில் மந்திரம் என்று நடுஅங்கி வேவது செய்து விளங்கிடு வீரே.
|
6
|
மயக்குற நோக்கினும் மாதவம் செய்வார் தமக்குறப் பேசின தாரணை கொள்ளார் சினக்குறப் பேசின தீவனை யாளர் தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே. 35,
|
7
|