மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விட முண்ட தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாம் கொத்தார்மலர் குளிர்சந்தகி லொளிர்குங்குமங் கொண்டு முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.
|
1
|
தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன் இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை யிடமாம் மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகி ரெரிகண் முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.
|
2
|
விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண் தளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம் களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.
|
3
|
சுரர்மாதவர் தொகுகின்னர ரவரோதொலை வில்லா நரரானபன் முனிவர்தொழ விருந்தானிட நலமார் அரசார்வர வணிபொற்கல னவைகொண்டுபன் னாளும் முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.
|
4
|
அறையார்கழ லந்தன்றனை அயின்மூவிலை யழகார் கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில் மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு முறையான்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
|
5
|
Go to top |
ஏவார்சிலை யெயினன்னுரு வாகியெழில் விசயற் கோவாதவின் னருள்செய்தவெம் மொருவற்கிட முலகில் சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார் மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
|
6
|
தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை முடியர் மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில் விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை முழவோடிசை நடமுன்செயு முதுகுன்றடை வோமே.
|
7
|
செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன் கதுவாய்கள்பத் தலறீயிடக் கண்டானுறை கோயில் மதுவாயசெங் காந்தண்மலர் நிறையக்குறை வில்லா முதுவேய்கண்முத் துதிரும்பொழின் முதுகுன்றடை வோமே.
|
8
|
இயலாடிய பிரமன்னரி யிருவர்க்கறி வரிய செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன் புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.
|
9
|
அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான் மருகன்வரு மிடபக்கொடி யுடையானிட மலரார் கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.
|
10
|
Go to top |
முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப் புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த நிகரில்லன தமிழ்மாலைக ளிசையோடிவை பத்தும் பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.
|
11
|
Other song(s) from this location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.012
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மத்தா வரை நிறுவி, கடல்
Tune - நட்டபாடை
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.053
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
Tune - பழந்தக்கராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.093
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நின்று மலர் தூவி, இன்று
Tune - குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.131
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
2.064
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
Tune - காந்தாரம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்ண மா மலர் கொடு
Tune - கொல்லி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.099
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முரசு அதிர்ந்து எழுதரு முது
Tune - சாதாரி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
6.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
Tune - திருத்தாண்டகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.025
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
Tune - நட்டராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.043
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நஞ்சி, இடை இன்று நாளை
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|