கலையார் மதியோ டுரநீரும் நிலையார் சடையா ரிடமாகும் மலையா ரமுமா மணிசந்தோ டலையார் புனல்சே ருமையாறே.
|
1
|
மதியொன் றியகொன் றைவடத்தான் மதியொன் றவுதைத் தவர்வாழ்வு மதியின் னொடுசேர் கொடிமாடம் மதியம் பயில்கின் றவையாறே.
|
2
|
கொக்கின் னிறகின் னொடுவன்னி புக்க சடையார்க் கிடமாகும் திக்கின் னிசைதே வர்வணங்கும் அக்கின் னரையா ரதையாறே.
|
3
|
சிறைகொண் டபுரம் மவைசிந்தக் கறைகொண் டவர்கா தல்செய்கோயில் மறைகொண் டநல்வா னவர்தம்மில் அறையும் மொலிசே ருமையாறே.
|
4
|
உமையா ளொருபா கமதாகச் சமைவா ரவர்சார் விடமாகும் அமையா ருடல்சோர் தரமுத்தம் அமையா வருமந் தணையாறே.
|
5
|
Go to top |
தலையின் றொடைமா லையணிந்து கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம் நிலைகொண் டமனத் தவர்நித்தம் மலர்கொண் டுவணங் குமையாறே.
|
6
|
வரமொன் றியமா மலரோன்றன் சிரமொன் றையறுத் தவர்சேர்வாம் வரைநின் றிழிவார் தருபொன்னி அரவங் கொடுசே ருமையாறே.
|
7
|
வரையொன் றதெடுத் தவரக்கன் சிரமங் கநெரித் தவர்சேர்வாம் விரையின் மலர்மே தகுபொன்னித் திரைதன் னொடுசே ருமையாறே.
|
8
|
சங்கக் கயனு மறியாமைப் பொங்குஞ் சுடரா னவர்கோயில் கொங்கிற் பொலியும் புனல்கொண்டு அங்கிக் கெதிர்காட் டுமையாறே.
|
9
|
துவரா டையர்தோ லுடையார்கள் கவர்வாய் மொழிகா தல்செய்யாதே தவரா சர்கள்தா மரையானோ டவர்தா மணையந் தணையாறே.
|
10
|
Go to top |
கலையார் கலிக்கா ழியர்மன்னன் நலமார் தருஞா னசம்பந்தன் அலையார் புனல்சூ ழுமையாற்றைச் சொலுமா லைவல்லார் துயர்வீடே.
|
11
|
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|