சீரணிதிகழ்திரு மார்பில்வெண்ணூலர் திரிபுரமெரிசெய்த செல்வர் வாரணிவனமுலை மங்கையோர்பங்கர் மான்மறியேந்திய மைந்தர் காரணிமணிதிகழ் மிடறுடையண்ணல் கண்ணுதல் விண்ணவரேத்தும் பாரணிதிகழ்தரு நான்மறையாளர் பாம்புர நன்னகராரே.
|
1
|
கொக்கிறகோடு கூவிளமத்தங் கொன்றையொ டெருக்கணிசடையர் அக்கினொடாமை பூண்டழகாக அனலதுவாடுமெம் மடிகள் மிக்கநல்வேத வேள்வியுளெங்கும் விண்ணவர்விரைமலர் தூவப் பக்கம்பல்பூதம் பாடிடவருவார் பாம்புர நன்னகராரே.
|
2
|
துன்னலினாடை யுடுத்ததன்மேலோர் சூறைநல்லரவது சுற்றிப் பின்னுவார்சடைகள் தாழவிட்டாடிப் பித்தராய்த்திரியுமெம் பெருமான் மன்னுமாமலர்கள் தூவிடநாளும்மாமலையாட்டியுந் தாமும் பன்னுநான்மறைகள் பாடிடவருவார் பாம்புர நன்னகராரே.
|
3
|
துஞ்சுநாள்துறந்து தோற்றமுமில்லாச் சுடர்விடுசோதியெம் பெருமான் நஞ்சுசேர்கண்ட முடையவென்னாதர் நள்ளிருள்நடஞ்செயுந் நம்பர் மஞ்சுதோய்சோலை மாமயிலாட மாடமாளிகைதன்மே லேறிப் பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர்பயிலும் பாம்புர நன்னகராரே.
|
4
|
நதியதனயலே நகுதலைமாலை நாண்மதிசடைமிசை யணிந்து கதியதுவாகக் காளிமுன்காணக் கானிடைநடஞ்செய்த கருத்தர் விதியதுவழுவா வேதியர்வேள்வி செய்தவரோத்தொலி யோவாப் பதியதுவாகப் பாவையுந்தாமும் பாம்புர நன்னகராரே.
|
5
|
Go to top |
ஓதிநன்குணர்வார்க் குணர்வுடையொருவ ரொளிதிகழுருவஞ்சே ரொருவர் மாதினையிடமா வைத்தவெம்வள்ளல் மான்மறியேந்திய மைந்தர் ஆதிநீயருளென் றமரர்கள்பணிய அலைகடல்கடையவன் றெழுந்த பாதிவெண்பிறைசடை வைத்தவெம்பரமர் பாம்புர நன்னகராரே.
|
6
|
மாலினுக்கன்று சக்கரமீந்து மலரவற்கொருமுக மொழித்து ஆலின்கீழறமோர் நால்வருக்கருளி யனலதுவாடுமெம் மடிகள் காலனைக்காய்ந்து தங்கழலடியாற் காமனைப்பொடிபட நோக்கிப் பாலனுக்கருள்கள் செய்தவெம்மடிகள் பாம்புர நன்னகராரே.
|
7
|
விடைத்தவல்லரக்கன் வெற்பினையெடுக்க மெல்லியதிருவிர லூன்றி அடர்த்தவன்றனக்கன் றருள்செய்தவடிக ளனலதுவாடுமெம் மண்ணல் மடக்கொடியவர்கள் வருபுனலாட வந்திழியரிசிலின் கரைமேல் படப்பையிற்கொணர்ந்து பருமணிசிதறும் பாம்புர நன்னகராரே.
|
8
|
கடிபடுகமலத் தயனொடுமாலுங் காதலோடடிமுடி தேடச் செடிபடுவினைக டீர்த்தருள்செய்யுந் தீவணரெம்முடைச் செல்வர் முடியுடையமரர் முனிகணத்தவர்கள் முறைமுறையடிபணிந் தேத்தப் படியதுவாகப் பாவையுந்தாமும் பாம்புர நன்னகராரே.
|
9
|
குண்டர்சாக்கியருங் குணமிலாதாருங் குற்றுவிட்டுடுக்கையர் தாமுங் கண்டவாறுரைத்துக் கானிமிர்த்துண்ணுங் கையர்தாமுள்ளவா றறியார் வண்டுசேர்குழலி மலைமகணடுங்க வாரணமுரிசெய்து போர்த்தார் பண்டுநாஞ்செய்த பாவங்கள்தீர்ப்பார் பாம்புர நன்னகராரே.
|
10
|
Go to top |
பார்மலிந்தோங்கிப் பருமதில்சூழ்ந்த பாம்புரநன்னக ராரைக் கார்மலிந்தழகார் கழனிசூழ்மாடக் கழுமலமுதுபதிக் கவுணி நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்செந்தமிழ் வல்லார் சீர்மலிந்தழகார் செல்வமதோங்கிச் சிவனடி நண்ணுவர்தாமே.
|
11
|