மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
|
1
|
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத் தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை மனத்தகத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும் நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
|
2
|
நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும் நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
|
3
|
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய் அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றா ணிழற்கீழ் நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
|
4
|
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர் தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித் தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ் நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
|
5
|
Go to top |
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய் அருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும் நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
|
6
|
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால் மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல் ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
|
7
|
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை அன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய் என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும் நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
|
8
|
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ் சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய் கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின் நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
|
9
|
வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும் தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார் துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
|
10
|
Go to top |
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச் சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால் நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.
|
11
|