தேவராயு மசுரராயுஞ் சித்தர்செழு மறைசேர் நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரிகால் நீரும் மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும் மூவராய முதலொருவன் மேயதுமு துகுன்றே.
|
1
|
பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதிரோன் மதிபார் எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணியமா னனோடு மற்றுமாதோர் பல்லுயிராய் மாலயனும் மறைகள் முற்றுமாகி வேறுமானான் மேயதுமு துகுன்றே.
|
2
|
வாரிமாகம் வைகுதிங்கள் வாளரவஞ் சூடி நாரிபாக நயந்துபூமேல் நான்முகன்றன் தலையில் சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந்தோன் றியதோர் மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயதுமு துகுன்றே.
|
3
|
பாடுவாருக் கருளுமெந்தை பனிமுதுபௌ வமுந்நீர் நீடுபாரு முழுதுமோடி யண்டர்நிலை கெடலும் நாடுதானு மூடுமோடி ஞாலமுநான் முகனும் ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்ததுமு துகுன்றே.
|
4
|
வழங்குதிங்கள் வன்னிமத்த மாசுணமீ சணவிச் செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர்திசை வணங்கத் தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம்பூ தஞ்சூழ முழங்குசெந்தீ யேந்தியாடி மேயதுமு துகுன்றே.
|
5
|
Go to top |
சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லராநல் லிதழி சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைந் தைம்புலனும் அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே.
|
6
|
இப்பாடல் கிடைக்கவில்லை.
|
7
|
மயங்குமாயம் வல்லராகி வானினொடு நீரும் இயங்குவோருக் கிறைவனாய விராவணன்றோ ணெரித்த புயங்கராக மாநடத்தன் புணர்முலைமா துமையாள் முயங்குமார்பன் முனிவரேத்த மேயதுமு துகுன்றே.
|
8
|
ஞாலமுண்ட மாலுமற்றை நான்முகனும் மறியாக் கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங்கொய் மலரால் ஏலவிண்டை கட்டிநாம மிசையவெப்போ துமேத்தும் மூலமுண்ட நீற்றர்வாயான் மேயதுமு துகுன்றே.
|
9
|
உறிகொள்கையர் சீவரத்த ருண்டுழன்மிண் டர்சொல்லை நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங்கை தொழுமின் மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப் பொங்குவிடத் தையுண்ட முறிகொண்மேனி மங்கைபங்கன் மேயதுமு துகுன்றே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.012
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மத்தா வரை நிறுவி, கடல்
Tune - நட்டபாடை
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.053
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
Tune - பழந்தக்கராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.093
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நின்று மலர் தூவி, இன்று
Tune - குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.131
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
2.064
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
Tune - காந்தாரம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்ண மா மலர் கொடு
Tune - கொல்லி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.099
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முரசு அதிர்ந்து எழுதரு முது
Tune - சாதாரி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
6.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
Tune - திருத்தாண்டகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.025
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
Tune - நட்டராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.043
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நஞ்சி, இடை இன்று நாளை
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|