வானத்துயர்தண் மதிதோய்சடைமேன் மத்த மலர்சூடித் தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவி பாகமாக் கானத்திரவி லெரிகொண்டாடுங் கடவு ளுலகேத்த ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய் மலையாரே.
|
1
|
சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகா டிடமாகக் கோலச்சடைக டாழக்கு ழல்யாழ் மொந்தை கொட்டவே பாலொத்தனைய மொழியாள்காண வாடும் பரமனார் ஏலத்தொடுநல் லிலவங்கமழும் ஈங்கோய் மலையாரே.
|
2
|
கண்கொணுதலார் கறைகொண்மிடற்றார் கரியி னுரிதோலார் விண்கொண்மதிசேர் சடையார்விடையார் கொடியார் வெண்ணீறு பெண்கொள்திருமார் பதனிற்பூசும் பெம்மா னெமையாள்வார் எண்குமரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய் மலையாரே.
|
3
|
மறையின்னிசையார் நெறிமென்கூந்தன் மலையான் மகளோடும் குறைவெண்பிறையும் புனலுந்நிலவுங் குளிர்புன் சடைதாழப் பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட் டெரியாடும் இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய் மலையாரே.
|
4
|
நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர் கண்ணினார் கந்தமலர்கள் பலவுந்நிலவு கமழ்புன் சடைதாழப் பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட் டெரியாடும் எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய் மலையாரே.
|
5
|
Go to top |
நீறாரகல முடையார்நிரையார் கொன்றை யரவோடும் ஆறார்சடையா ரயில்வெங்கணையா லவுணர் புரமூன்றும் சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்க ணடல்வெள்ளை ஏறார்கொடியா ருமையாளோடும் ஈங்கோய் மலையாரே.
|
6
|
வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன் விரிகொன்றை நனையார்முடிமேன் மதியஞ்சூடு நம்பான் நலமல்கு தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோ டனலேந்தும் எனையாளுடையா னுமையாளோடும் ஈங்கோய் மலையாரே.
|
7
|
பரக்கும்பெருமை யிலங்கையென்னும் பதியிற் பொலிவாய அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளு மணியார் விரல்தன்னால் நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்று நின்றேத்த இரக்கம்புரிந்தா ருமையாளோடும் ஈங்கோய் மலையாரே.
|
8
|
வரியார்புலியி னுரிதோலுடையான் மலையான் மகளோடும் பிரியாதுடனா யாடல்பேணும் பெம்மான் றிருமேனி அரியோடயனு மறியாவண்ண மளவில் பெருமையோ டெரியாய்நிமிர்ந்த வெங்கள்பெருமான் ஈங்கோய் மலையாரே.
|
9
|
பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்கு சமணரும் மண்டைகலனாக் கொண்டுதிரியு மதியில் தேரரும் உண்டிவயிறா ருரைகள்கொள்ளா துமையோ டுடனாகி இண்டைச்சடையா னிமையோர்பெருமான் ஈங்கோய் மலையாரே.
|
10
|
Go to top |
விழவாரொலியு முழவுமோவா வேணு புரந்தன்னுள் அழலார்வண்ணத் தடிகளருள்சே ரணிகொள் சம்பந்தன் எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன் கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலை களைவாரே.
|
11
|