சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.106   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஊறல் (தக்கோலம்) - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் ராகத்தில் திருமுறை அருள்தரு உமையம்மை உடனுறை அருள்மிகு உமாபதீசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=yn1AREaeV-8   Add audio link Add Audio
மாறி லவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று
நீறெழ வெய்தவெங்கள் நிமல னிடம்வினவில்
தேற லிரும்பொழிலுந் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊற லமர்ந்தபிரா னொலியார்கழ லுள்குதுமே.


1


மத்த மதக்கரியை மலையான்மக ளஞ்சவன்று கையால்
மெத்த வுரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலநாளுந் நயனம்
ஒத்தல ருங்கழனித் திருவூறலை யுள்குதுமே.


2


ஏன மருப்பினொடு மெழிலாமையும் பூண்டழகார் நன்றும்
கானமர் மான்மறிக்கைக் கடவுள் கருதுமிடம்
வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை
ஊன மறுத்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.


3


நெய்யணி மூவிலைவே னிறைவெண்மழு வும்மனலு மன்று
கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவில்
மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான் றிருவூறலை யுள்குதுமே.


4


எண்டிசை யோர்மகிழ வெழின்மாலையும் போனகமும் பண்டு
சண்டி தொழவளித்தான் அவன்றாழு மிடம்வினவில்
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரானமருந் திருவூறலை யுள்குதுமே.


5


Go to top
இப்பாடல் கிடைக்கவில்லை.


6


இப்பாடல் கிடைக்கவில்லை.


7


கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி
மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தா னிடம்வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளு மெய்யுந்நெரிய வன்று
ஒறுத்தருள் செய்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.


8


நீரின் மிசைத்துயின்றோ னிறைநான் முகனுமறியா தன்று
தேரும் வகை நிமிர்ந்தான் அவன்சேரு மிடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரு மரவசைத்தான் றிருவூறலை யுள்குதுமே.


9



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஊறல் (தக்கோலம்)
1.106   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மாறு இல் அவுணர் அரணம்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருஊறல் (தக்கோலம்) உமாபதீசுவரர் உமையம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 1.106