பணிந்தவ ரருவினை பற்றறுத் தருள்செயத் துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில் பிணிந்தவ னரவொடு பேரெழி லாமைகொண் டணிந்தவன் வளநக ரந்தணை யாறே.
|
1
|
கீர்த்திமிக் கவனகர் கிளரொளி யுடனடப் பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப் போர்த்தவன் கரியுரி புலியத ளரவரை ஆர்த்தவன் வளநக ரந்தணை யாறே.
|
2
|
வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர் எரிந்தற வெய்தவ னெழில்திகழ் மலர்மேல் இருந்தவன் சிரமது விமையவர் குறைகொள அரிந்தவன் வளநக ரந்தணை யாறே.
|
3
|
வாய்ந்தவல் லவுணர்தம் வளநக ரெரியிடை மாய்ந்தற வெய்தவன் வளர்பிறை விரிபுனல் தோய்ந்தெழு சடையினன் தொன்மறை யாறங்கம் ஆய்ந்தவன் வளநக ரந்தணை யாறே.
|
4
|
வானமர் மதிபுல்கு சடையிடை யரவொடு தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன் மானன மென்விழி மங்கையொர் பாகமும் ஆனவன் வளநக ரந்தணை யாறே.
|
5
|
Go to top |
முன்பனை முனிவரோ டமரர்க ளடிதொழும் இன்பனை யிணையில விறைவனை யெழில்திகழ் என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும் அன்பன வளநக ரந்தணை யாறே.
|
6
|
வன்றிற லவுணர்தம் வளநக ரெரியிடை வெந்தற வெய்தவன் விளங்கிய மார்பினில் பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன் அந்தமில் வளநக ரந்தணை யாறே.
|
7
|
விடைத்தவல் லரக்கனல் வெற்பினை யெடுத்தலும் அடித்தலத் தாலிறை யூன்றிமற் றவனது முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை அடர்த்தவன் வளநக ரந்தணை யாறே.
|
8
|
விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனல் எண்ணிலி தேவர்க ளிந்திரன் வழிபடக் கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய அண்ணல்தன் வளநக ரந்தணை யாறே.
|
9
|
மருளுடை மனத்துவன் சமணர்கண் மாசறா இருளுடை யிணைத்துவர்ப் போர்வையி னார்களும் தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா அருளுடை யடிகள்தம் அந்தணை யாறே.
|
10
|
Go to top |
நலமலி ஞானசம் பந்தன தின்றமிழ் அலைமலி புனல்மல்கு மந்தணை யாற்றினைக் கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.
|
11
|
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|