எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம் ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே.
|
1
|
உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சு மவனே சமைக்கவல் லானே.
|
2
|
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன் குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில் அசைவில் உலகம் அதுஇது வாமே.
|
3
|
விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப் படையுடை யான்பரி சேஉல காக்கும் கொடையுடை யான்குணம் எண்குண மாகும் சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.
|
4
|
உகந்துநின் றேபடைத் தான்உல கேழும் உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம் உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.
|
5
|
Go to top |
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும் படைத்துடை யான்பல தேவரை முன்னே படைத்துடை யான்பல சீவரை முன்னே படைத்துடை யான்பர மாகிநின் றானே.
|
6
|
ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம் ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.
|
7
|
உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல் விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள் மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன் கண்ணின்ற மாமணி மாபோதமாமே.
|
8
|
ஆரும் அறியாத அண்டத் திருவுருப் பார்முத லாகப் பயிலுங் கடத்திலே நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச் சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.
14, |
9
|