அருளில் தலைநின் றறிந்தழுந் தாதார் அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார் அருளின் பெருமை அறியார் செறியார் அருளின் பிறந்திட்(டு) அறிந்தறி வாரே.
|
1
|
வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி ஆரா அமுதளித் தானந்த பேர்நந்தி பேரா யிரம்உடைப் பெம்மான்பேர் ஒன்றினில் ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.
|
2
|
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் கண்டேன் சிவன்பெருந்தன்மையைக் கூடிய வாறே குறியாக் குறிதந்தென் ஊடுகின் றாள்அவன் தன்அருள் உற்றே.
|
3
|
உற்ற பிறப்பும் உறுமல மானதும் பற்றிய மாயா படலம் எனப்பண்ணி `அற்றனை நீ`என் றடிவைத்தான் பேர்நந்தி கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.
|
4
|
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னை வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.
|
5
|
Go to top |
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா ஒளியுளோர்க் கன்றோ ஒழியா தொளியும் ஒளியிருள் கண்டகண் போல்வே றாய்உள் ஒளியிருள் நீங்கி உயிர்சிவம் ஆமே.
|
6
|
புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி நிறமே புகுந்தென்னை நின்மல னாக்கி அறமே புகுந்தெனக்(கு) ஆரமு தீந்த திறமேதென் றெண்ணித் திகைத்திருந் தேனே.
|
7
|
அருளது என்ற அகலிடம் ஒன்றும் பொருளது என்ற புகலிடம் ஒன்றும் மருளது நீங்க மனம்புகுந் தானைத் தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.
|
8
|
கூறுமின் நீர்முன் பிறந்திங்(கு) இறந்தைமை வேறொரு தெய்வத்தின்மெய்ப்பொருள் நீக்கிடும் பாறணி யும்உடல் வீழவிட்(டு) ஆயுயிர் தேறணி யாம்இது செப்பவல் லீரே.
11, |
9
|