ஆக மதத்தன ஐந்து களிறுகள் ஆக மதத்தறி யோடணை கின்றில பாகனும் எய்த்தவை தாமும் இளைத்தபின் யோகு திருந்துதல் ஒன்றறி யோமே.
|
1
|
கருத்தின்நன் னூல்கற்றுக் கால்கொத்திப் பாகன் திருத்தினும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா(து) எருத்துற ஏறி யிருக்கிலும் ஆங்கே வருத்தினும் அம்மா வழிநட வாதே.
|
2
|
புலம்ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும் நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து குலம்ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் உலமந்து போம்வழி ஒன்பது தானே.
|
3
|
அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சக மேபுகும் அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால் எஞ்சா திறைவனை எய்தலும் ஆமே.
|
4
|
ஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள் ஐவர்உம் மைந்தரும் ஆளக் கருதுவர் ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில் ஐவர்க் கிறையிறுத் தாற்றகி லோமே.
|
5
|
Go to top |
சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும் சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும் கொல்லநின் றோடும் குதிரையொத் தேனே.
|
6
|
எண்ணிலி இல்லி யுடைத்தவ் விருட்டறை எண்ணிலி இல்லியோ டேகிற் பிழைதரும் எண்ணிலி இல்லியோ டேகாமை காக்குமேல் எண்ணிலி இல்லத்தோர் இன்பம தாமே.
|
7
|
விதியின் பெருவலி வேலைசூழ் வையம் துதியின் பெருவலி தொல்வான் உலகம் மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை நிதியின் பெருவலி நீர்வலி தானே.
33, |
8
|