அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற நீரிற் குமிழியைக் காணின் எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப் பொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.
|
1
|
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றின் படரும் சிவசத்தி தானே பரமாம் உடலைவிட் டிந்த உயிர்எங்கு மாகிக் கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.
|
2
|
செவி மெய் வாய் கண் மூக்குச் சேர்இந்திரியம் அவியின் றியமன மாதிகள் ஐந்தும் குவிவொன றிலாமல் விரிந்து குவிந்து தவிர்வொன் றிலாத சராசரந் தாமே.
|
3
|
பரன் எங்கும் ஆரப் பரந்துற்று நிற்கும் திரன் எங்கு மாகிச் செறிவெங்கும் எய்தும் உரன்எங்கு மாய்உல குண்டு முமிழ்க்கும் வரன்இங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.
|
4
|
அளந்த துரியத் தறிவினை வாங்கி உளங்கொள் பரம்சகம் உண்டஃ தொழித்துக் கிளர்ந்த பரம்சிவம் சேரக் கிடைத்தால் விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.
|
5
|
Go to top |
இரும்புண்ட நீர்என என்னைஉள் வாங்கிப் பரம்பர மான பரமது விட்டே உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி யிருந்தனன் நந்தி இதயத்து ளானே.
|
6
|
கரிஉண் விளவின் கனிபோல் உயிரும் உரிய பரமும்முன் ஓதும் சிவமும் அரிய துரியத்(து) அகிலமும் எல்லாம் திரிய விழுங்கும் சிவபெரு மானே.
|
7
|
அந்தமும் ஆதியும ஆகும் பராபரன் தந்தம் பரம்பரன் தன்னில் பரமுடன் நந்தமை உண்டுமெய்ஞ் ஞானஞே யாந்தத்தே நந்தி யிருந்தனன் நாம்அறி யோமே.
38, |
8
|