பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்(து) அம்மான் அடிதந்(து) அருட்கடல் ஆடினோம் எம்மாய மும்விடுத்(து) எம்மைக் கரந்திட்டுச் சும்மா திருந்திடம் சோதனை ஆகுமே.
|
1
|
அறிவுடை யான்அரு மாமறை யுள்ளே செறிவுடை யான்மிகு தேவர்க்கும் தேவன் பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த குறியுடை யானொடும் கூடுவன் நானே.
|
2
|
குறியாக் குறியினில் கூடாத கூட்டத்(து) அறியா அறிவில் அவிழ்ந்தே சித்தமாய் நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றும் செறியாச் செறிவே சிவம்என லாமே.
|
3
|
காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும் பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போல் உளன் எம்மிறை காவலன் எங்கும் கலந்துநின் றானே.
|
4
|
விருப்பொடு கூடி விகிர்தரை நாடில் பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார் நெருப்புரு வாகி நிகழ்ந்து நிறைந்தே.
|
5
|
Go to top |
நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து வந்தென் அகம்படி கோயில்கொண் டான் கொள்ள `எந்தைவந் தான்`என்(று) எழுந்தேன் எழுதலும் சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.
|
6
|
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப் புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின் பன்மையில் யாதென நும்மைப் பரிசுசெய் தொன்மையின் உண்மை தொடர்ந்து நின்றானே
|
7
|
தொடர்ந்துநின் றான்என்னைச் சோதிக்கும் போது தொடர்ந்துநின் றான்நல்ல நாதனும் அங்கே படர்ந்துநின்(று) ஆதிப் பராபரன் எந்தை கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.
|
8
|
அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள் இவ்வழி தந்தை தாய் கேளிரே ஒக்கும் செவ்வழி சேர்சிவ லோகத் திருத்திடும் இவ்வழி நந்தி யியல்பது தானே.
|
9
|
எறிவது ஞானத்(து) உறைவாள் உருவி அறிவத னோடே அவ் ஆண்டகை யானைச் செறிவது தேவர்க்கும் தேவர் பிரானைப் பறிவது பல்கணம் பற்றுவிட் டாரே.
|
10
|
Go to top |
ஆதிப் பிரான்தந்த வாள்அங்கைக் கொண்டபின் வேதித்திங் கென்னை விலக்கவல் லார்இல்லை சோதிப்பன் அங்கே சுவடும் படாவண்ணம் ஆதிக்கண் தெய்வம் அவன்இவன் ஆமே.
|
11
|
அந்தக் கருவை அருவை வினைசெய்தற் பந்தப் பனிஅச்சம் பல்பிறப் பும்வாட்டிச் சிந்தை திருத்தலும் சேர்ந்தார்அச் சோதனை சந்திக்கத் தற்பர மாகும் சதுரர்க்கே.
|
12
|
உரையற்ற தொன்றை உரைத்தான் எனக்குக் கரையற் றெழுந்த கலைவேட் பறுத்துத் திரையற்ற என்னுடல் நீங்கா திருத்திப் புரையற்ற என்னுட் புகும்தற் பரனே.
1, |
13
|