அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப் பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத் தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.
|
1
|
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம் சிரானந்தம் பூரித்துத் தென்றிசை சேர்ந்து புரானந்த போகனாய்ப் பூவையும் தானும் நிரானந்த மாக நிருத்தஞ்செய் தானே.
|
2
|
ஆதி பரன்ஆட அங்கை அனலாட ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப் பாதி மதியாடப் பாராண்டம் மீதாட நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.
|
3
|
கும்பிட அம்பலத் தாடிய கோநடம் அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம் செம்பொரு ளாகும் சிவபோகம் சேர்ந்துற்றால் உம்பர மோனஞா னாந்தத்தின் உண்மையே.
|
4
|
மேதினி மூவேழ் மிகும்அண்டம் மூவேழு சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு நாதமொடு அந்தம் நடனாந்தம் நாற்பதம் பாதியோ டாடும் பரன்இரு பாதமே.
|
5
|
Go to top |
இடைபிங் கலைஇம வானோ டிலங்கை நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை கடவும் திலைவனம் கைகண்ட மூலம் படர்வொன்றி யெண்ணும் பரமாம் பரமே.
|
6
|
ஈறான கன்னி குமரியே காவிரி வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்பேழும் பேறான வேதா கமமே பிறங்கலால் மாறான தென்திசை வையகம் சுத்தமே.
|
7
|
நாதத் தினில் ஆடி நாற்பதத் தேஆடி வேதத் தினில் ஆடித் தழல்அந்தம் மீதாடிப் போதத் தினில் ஆடிப் புவனம் முழுதாடும் தீதற்ற தேவாதி தேவர் பிரானே.
|
8
|
தேவரொ டாடித் திருவம் பலத்தாடி மூவரொ டாடி முனிகணத் தோடாடிப்பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக் கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.
|
9
|
ஆறு முகத்தின் அதிபதி தான்` என்றும் கூறு சமயக் குருபரன் தான் `என்றும் தேறினர் தேறுத் திருவம் பலத்துள்ளே வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே`.
|
10
|
Go to top |
அம்பலம் ஆடரங் காக அதன்மீதே எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி உம்பர மாம் நாதத்து ரேகையுள் தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.
|
11
|
ஆடிய காலும் அதிற்சிலம் போசையும் பாடிய பாட்டும் பலவான நட்டமும் கூடிய கோலம் குருபரன் கொண்டாடத் தேடிஉள் ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.
|
12
|
இருதயந் தன்னில் எழுந்த பிராணன் கரசர ணாதி கலக்கும் படியே அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன் குரவனாய் எங்கணும் கூத்துகந் தானே.
15, |
13
|