உள்ளத்துள் ஓம்எனும் ஈசன் ஒருவனை உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை உள்ளத்து ளேஉறல் ஆகாய மாமே.
|
1
|
பெருநில மாய்அண்ட மாய்அண்டத் தப்பால் குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன் பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன் அருநில மாய்நின்ற ஆதிப் பிரானே.
|
2
|
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானே.
|
3
|
பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி அயனொடு மால்அறி யாவகை நின்றிட்(டு) உயர்நெறி யாய்வெளி ஒன்றது வாமே.
|
4
|
அறிவுக் கறிவாம் அகண்ட ஒளியும் பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும் அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள் பிறியா திருக்கிற் பெருங்காலம் ஆமே.
|
5
|
Go to top |
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்(து) ஏகாச மாசுணம் இட்டங் கிருந்தவன் ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம் ஆகாச மாய்அங்கி வண்ணனு மாமே.
|
6
|
உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது குயிற்கொண்ட பேதை குலாவி உலாவி வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே.
|
7
|
நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்(து) அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி நணுகிய மின்னொளி சோதி வெளியைப் பணியின் அமுதம் பருகலும் ஆமே.
|
8
|
மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன் தக்கார் உரைத்த தவநெறி யேசென்று புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை நக்கார்க் கழல்வழி நாடுமின் நீரே.
|
9
|
புறத்துள்ஆ காசம் புவனம் உலகம் அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே.
17, |
10
|
Go to top |