வரியமறையார் பிறையார் மலையோர்சிலையா வணக்கி எரியமதில்கள் எய்தார் எறியுமுசலம் உடையார் கரியமிடறு முடையார் கடவூர்மயான மமர்ந்தார் பெரியவிடைமேல் வருவார் அவரெம்பெருமா னடிகளே.
|
1
|
மங்கைமணந்த மார்பர் மழுவாள்வலனொன் றேந்திக் கங்கைசடையிற் கரந்தார் கடவூர்மயான மமர்ந்தார் செங்கண்வெள்ளே றேறிச் செல்வஞ்செய்யா வருவார் அங்கையேறிய மறியார் அவரெம்பெருமா னடிகளே.
|
2
|
ஈடலிடப மிசைய வேறிமழுவொன் றேந்திக் காடதிடமா வுடையார் கடவூர்மயான மமர்ந்தார் பாடலிசைகொள் கருவி படுதம்பலவும் பயில்வார் ஆடலரவ முடையார் அவரெம்பெருமா னடிகளே.
|
3
|
இறைநின் றிலங்கு வளையா ளிளையாளொருபா லுடையார் மறைநின் றிலங்கு மொழியார் மலையார்மனத்தின் மிசையார் கறைநின் றிலங்கு பொழில்சூழ் கடவூர்மயான மமர்ந்தார் பிறைநின் றிலங்கு சடையார் அவரெம்பெருமா னடிகளே.
|
4
|
வெள்ளையெருத்தின் மிசையார் விரிதோடொருகா திலங்கத் துள்ளுமிளமான் மறியார் சுடர்பொற்சடைகள் துளங்கக் கள்ளநகுவெண் டலையார் கடவூர்மயான மமர்ந்தார் பிள்ளைமதிய முடையார் அவரெம்பெருமா னடிகளே.
|
5
|
Go to top |
பொன்றாதுதிரு மணங்கொள் புனைபூங்கொன்றை புனைந்தார் ஒன்றாவெள்ளே றுயர்த்த துடையாரதுவே யூர்வார் கன்றாவினஞ்சூழ் புறவிற் கடவூர்மயான மமர்ந்தார் பின்றாழ்சடைய ரொருவர் அவரெம்பெருமா னடிகளே.
|
6
|
பாசமான களைவார் பரிவார்க்கமுத மனையார் ஆசைதீரக் கொடுப்பா ரலங்கல்விடைமேல் வருவார் காசைமலர்போன் மிடற்றார் கடவூர்மயான மமர்ந்தார் பேசவருவா ரொருவர் அவரெம்பெருமா னடிகளே.
|
7
|
செற்றவரக்க னலறத் திகழ்சேவடிமெல் விரலாற் கற்குன்றடர்த்த பெருமான் கடவூர்மயான மமர்ந்தார் மற்றொன்றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல் பெற்றொன்றேறி வருவார் அவரெம்பெருமா னடிகளே.
|
8
|
வருமாகரியி னுரியார் வளர்புன்சடையார் விடையார் கருமானுரிதோ லுடையார் கடவூர்மயான மமர்ந்தார் திருமாலொடுநான் முகனுந் தேர்ந்துங்காணமுன் னொண்ணாப் பெருமானெனவும் வருவார் அவரெம்பெருமா னடிகளே.
|
9
|
தூயவிடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள் காயவேவச் செற்றார் கடவூர்மயான மமர்ந்தார் தீயகருமஞ் சொல்லுஞ் சிறுபுன்றேர ரமணர் பேய்பேயென்ன வருவார் அவரெம்பெருமா னடிகளே.
|
10
|
Go to top |
மரவம்பொழில்சூழ் கடவூர் மன்னுமயான மமர்ந்த அரவமசைத்த பெருமா னகலமறிய லாகப் பரவுமுறையே பயிலும் பந்தன்செஞ்சொன் மாலை இரவும்பகலும் பரவி நினைவார்வினைக ளிலரே.
|
11
|