அன்ன மென்னடை யரிவையோ டினிதுறை யமரர்தம் பெருமானார் மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர் வைத்தவர் வேதந்தாம் பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற் சிரபுரத் தார்சீரார் பொன்னின் மாமல ரடிதொழு மடியவர் வினையொடும் பொருந்தாரே.
|
1
|
கோல மாகரி யுரித்தவ ரரவொடு மேனக்கொம் பிளவாமை சாலப் பூண்டுதண் மதியது சூடிய சங்கர னார்தம்மைப் போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர் பொருகடல் விடமுண்ட நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந் தொழவினை நில்லாவே.
|
2
|
மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவங்கெட மதித்தன்று கானத் தேதிரி வேடனா யமர்செயக் கண்டருள் புரிந்தார்பூந் தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ் சிரபுரத் துறையெங்கள் கோனைக் கும்பிடு மடியரைக் கொடுவினை குற்றங்கள் குறுகாவே.
|
3
|
மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக் காலனை யுதைசெய்தார் பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப் பிணக்கறுத் தருள்செய்வார் வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச் சிரபுரத் தமர்கின்ற ஆணிப் பொன்னினை யடிதொழு மடியவர்க் கருவினை யடையாவே.
|
4
|
பாரு நீரொடு பல்கதி ரிரவியும் பனிமதி யாகாசம் ஓரும் வாயுவு மொண்கனல் வேள்வியிற் றலைவனு மாய்நின்றார் சேருஞ் சந்தன மகிலொடு வந்திழி செழும்புனற் கோட்டாறு வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழு மடியவர் வருந்தாரே.
|
5
|
Go to top |
ஊழி யந்தத்தி லொலிகட லோட்டந்திவ் வுலகங்க ளவைமூட ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக வந்தரத் துயர்ந்தார்தாம் யாழி னேர்மொழி யேழையோ டினிதுறை யின்பனெம் பெருமானார் வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ வல்வினை யடையாவே.
|
6
|
பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெயப் பிணமிடு சுடுகாட்டில் வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநட மாடும்வித் தகனாரொண் சாய்க டான்மிக வுடையதண் மறையவர் தகுசிர புரத்தார்தாந் தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத் தொழுமவர் தளராரே.
|
7
|
இலங்கு பூண்வரை மார்புடை யிராவண னெழில்கொள்வெற் பெடுத்தன்று கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி நெரியவைத் தருள்செய்தார் புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றன்மன் றதனிடைப் புகுந்தாருங் குலங்கொண் மாமறை யவர்சிர புரந்தொழு தெழவினை குறுகாவே.
|
8
|
வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன் மாயனென் றிவரன்று கண்டு கொள்ளவோ ரேனமோ டன்னமாய்க் கிளறியும் பறந்துந்தாம் பண்டு கண்டது காணவே நீண்டவெம் பசுபதி பரமேட்டி கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ வினையவை கூடாவே.
|
9
|
பறித்த புன்றலைக் குண்டிகைச் சமணரும் பார்மிசைத் துவர்தோய்ந்த செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத் தேவர்கள் பெருமானார் முறித்து மேதிகள் கரும்புதின் றாவியின் மூழ்கிட விளவாளை வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை விட்டிடு மிகத்தானே.
|
10
|
Go to top |
பரசு பாணியைப் பத்தர்க ளத்தனைப் பையர வோடக்கு நிரைசெய் பூண்டிரு மார்புடை நிமலனை நித்திலப் பெருந்தொத்தை விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை விண்ணவர் பெருமானைப் பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே.
|
11
|