சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.112   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவாடானை - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு அம்பாயிரவல்லியம்மை உடனுறை அருள்மிகு ஆதிரத்தினேசுவரர் திருவடிகள் போற்றி
https://sivaya.org/audio/2.112 Maathor kooruganthu.mp3  https://www.youtube.com/watch?v=_VfzpCKqXOY   Add audio link Add Audio
மாதோர்கூறுகந் தேறதேறிய
ஆதியானுறை யாடானை
போதினாற்புனைந் தேத்துவார்தமை
வாதியாவினை மாயுமே.


1


வாடல்வெண்டலை யங்கையேந்திநின்
றாடலானுறை யாடானை
தோடுலாமலர் தூவிக்கைதொழ
வீடுநுங்கள் வினைகளே.


2


மங்கைகூறினன் மான்மறியுடை
அங்கையானுறை யாடானை
தங்கையாற்றொழு தேத்தவல்லவர்
மங்குநோய்பிணி மாயுமே.


3


சுண்ணநீறணி மார்பிற்றோல்புனை
அண்ணலானுறை யாடானை
வண்ணமாமலர் தூவிக்கைதொழ
எண்ணுவாரிட ரேகுமே.


4


கொய்யணிம்மலர்க் கொன்றைசூடிய
ஐயன்மேவிய வாடானை
கையணிம்மல ரால்வணங்கிட
வெய்யவல்வினை வீடுமே.


5


Go to top
வானிளம்மதி மல்குவார்சடை
ஆனஞ்சாடல னாடானை
தேனணிம்மலர் சேர்த்தமுன்செய்த
ஊனமுள்ள வொழியுமே.


6


துலங்குவெண்மழு வேந்திச்சூழ்சடை
அலங்கலானுறை யாடானை
நலங்கொண்மாமலர் தூவிநாடொறும்
வலங்கொள்வார்வினை மாயுமே.


7


வெந்தநீறணி மார்பிற்றோல்புனை
அந்தமில்லவ னாடானை
கந்தமாமலர் தூவிக்கைதொழும்
சிந்தையார்வினை தேயுமே.


8


மறைவலாரொடு வானவர்தொழு
தறையுந்தண்புன லாடானை
உறையும்ஈசனை யேத்தத்தீவினை
பறையுநல்வினை பற்றுமே.


9


மாயனும்மல ரானுங்கைதொழ
ஆயவந்தண னாடானை
தூயமாமலர் தூவிக்கைதொழத்
தீயவல்வினை தீருமே.


10


Go to top
வீடினார்மலி வெங்கடத்துநின்
றாடலானுறை யாடானை
நாடிஞானசம் பந்தன்செந்தமிழ்
பாடநோய்பிணி பாறுமே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாடானை
2.112   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மாது ஓர் கூறு உகந்து,
Tune - நட்டராகம்   (திருவாடானை ஆதிரத்தினேசுவரர் அம்பாயிரவல்லியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 2.112