இறையவ னீசனெந்தை யிமை யோர்தொழு தேத்தநின்ற கறையணி கண்டன்வெண்டோ டணி காதினன் காலத்தன்று மறைமொழி வாய்மையினான் மலையா ளொடு மன்னுசென்னிப் பிறையணி செஞ்சடையான் பிர மாபுரம் பேணுமினே.
|
1
|
சடையினன் சாமவேதன் சரி கோவண வன்மழுவாட் படையினன் பாய்புலித்தோ லுடை யான்மறை பல்கலைநூல் உடையவ னூனமில்லி யுட னாயுமை நங்கையென்னும் பெடையொடும் பேணுமிடம் பிர மாபுரம் பேணுமினே.
|
2
|
மாணியை நாடுகால னுயிர் மாய்தரச் செற்றுக்காளி காணிய வாடல்கொண்டான் கலந் தூர்வழி சென்றுபிச்சை ஊணியல் பாகக்கொண்டங் குட னேயுமை நங்கையொடும் பேணிய கோயின்மன்னும் பிர மாபுரம் பேணுமினே.
|
3
|
பாரிடம் விண்ணுமெங்கும் பயி னஞ்சு பரந்துமிண்டப் பேரிடர்த் தேவர்கணம் பெரு மானிது காவெனலும் ஓரிடத் தேகரந்தங் குமை நங்கையொ டும்முடனே பேரிட மாகக்கொண்ட பிர மாபுரம் பேணுமினே.
|
4
|
நச்சர வச்சடைமே னளிர் திங்களு மொன்றவைத்தங் கச்ச மெழவிடைமே லழ கார்மழு வேந்திநல்ல இச்சை பகர்ந்துமிக விடு மின்பலி யென்றுநாளும் பிச்சைகொ ளண்ணனண்ணும் பிர மாபுரம் பேணுமினே.
|
5
|
Go to top |
பெற்றவன் முப்புரங்கள் பிழை யாவண்ணம் வாளியினாற் செற்றவன் செஞ்சடையிற் றிகழ் கங்கை தனைத்தரித்திட் டொற்றை விடையினனா யுமை நங்கையொ டும்முடனே பெற்றிமை யாலிருந்தான் பிர மாபுரம் பேணுமினே.
|
6
|
வேத மலிந்தவொலி விழ வின்னொலி வீணையொலி கீத மலிந்துடனே கிள ரத்திகழ் பௌவமறை ஓத மலிந்துயர்வான் முக டேறவொண் மால்வரையான் பேதையொ டும்மிருந்தான் பிர மாபுரம் பேணுமினே.
|
7
|
இமையவ ரஞ்சியோட வெதிர் வாரவர் தம்மையின்றி அமைதரு வல்லரக்கன் னடர்த் தும்மலை யன்றெடுப்பக் குமையது செய்துபாடக் கொற்ற வாளொடு நாள்கொடுத்திட் டுமையொ டிருந்தபிரான் பிர மாபுர முன்னுமினே.
|
8
|
ஞால மளித்தவனும் மரி யும்மடி யோடுமுடி காலம் பலசெலவுங் கண்டி லாமையி னாற்கதறி ஓல மிடவருளி யுமை நங்கையொ டும்முடனாய் ஏல விருந்தபிரான் பிர மாபுர மேத்துமினே.
|
9
|
துவருறு மாடையினார் தொக்க பீலியர் நக்கரையர் அவரவர் தன்மைகள்கண் டணு கேன்மின் னருள்பெறுவீர் கவருறு சிந்தையொன்றிக் கழி காலமெல் லாம்படைத்த இவரவ ரென்றிறைஞ்சிப் பிர மாபுர மேத்துமினே.
|
10
|
Go to top |
உரைதரு நான்மறையோர் புகழ்ந் தேத்தவொண் மாதினொடும் வரையென வீற்றிருந்தான் மலி கின்ற பிரமபுரத் தரசினை யேத்தவல்ல வணி சம்பந்தன் பத்தும்வல்லார் விரைதரு விண்ணுலகம் மெதிர் கொள்ள விரும்புவரே.
|
11
|
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
|
1.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) )
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|