திருமலர்க் கொன்றைமாலை திளைக் கும்மதி சென்னிவைத்தீர் இருமலர்க் கண்ணிதன்னோ டுட னாவது மேற்பதொன்றே பெருமலர்ச் சோலைமேக முரிஞ் சும்பெருஞ் சாத்தமங்கை அருமல ராதிமூர்த்தீ யய வந்தி யமர்ந்தவனே.
|
1
|
பொடிதனைப் பூசுமார்பிற் புரி நூலொரு பாற்பொருந்தக் கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதே கடிமண மல்கிநாளுங் கம ழும்பொழிற் சாத்தமங்கை அடிகணக் கன்பரவ வய வந்தி யமர்ந்தவனே.
|
2
|
நூனலந் தங்குமார்பி னுகர் நீறணிந் தேறதேறி மானன நோக்கிதன்னோ டுட னாவது மாண்பதுவே தானலங் கொண்டுமேகந் தவ ழும்பொழிற் சாத்தமங்கை ஆனலந் தோய்ந்தவெம்மா னயவந்தி யமர்ந்தவனே.
|
3
|
மற்றவின் மால்வரையா மதி லெய்துவெண் ணீறுபூசிப் புற்றர வல்குலாளோ டுட னாவதும் பொற்பதுவே கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச் செய்தபாவம் அற்றவர் நாளுமேத்த வய வந்தி யமர்ந்தவனே.
|
4
|
வெந்தவெண் ணீறுபூசி விடை யேறிய வேதகீதன் பந்தண வும்விரலா ளுட னாவதும் பாங்கதுவே சந்தமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ் சாத்தமங்கை அந்தமா யாதியாகி யய வந்தி யமர்ந்தவனே.
|
5
|
Go to top |
வேதமாய் வேள்வியாகி விளங் கும்பொருள் வீடதாகிச் சோதியாய் மங்கைபாகந் நிலை தான்சொல்ல லாவதொன்றே சாதியான் மிக்கசீராற் றகு வார்தொழுஞ் சாத்தமங்கை ஆதியாய் நின்றபெம்மா னய வந்தி யமர்ந்தவனே.
|
6
|
இமயமெல் லாமிரிய மதி லெய்துவெண் ணீறுபூசி உமையையொர் பாகம்வைத்த நிலை தானுன்ன லாவதொன்றே சமயமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ் சாத்தமங்கை அமையவே றோங்குசீரா னய வந்தி யமர்ந்தவனே.
|
7
|
பண்ணுலாம் பாடல்வீணை பயில் வானோர் பரமயோகி விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே தண்ணிலா வெண்மதியந் தவ ழும்பொழிற் சாத்தமங்கை அண்ணலாய் நின்றவெம்மா னய வந்தி யமர்ந்தவனே.
|
8
|
பேரெழிற் றோளரக்கன் வலி செற்றதும் பெண்ணோர்பாகம் ஈரெழிற் கோலமாகி யுட னாவது மேற்பதொன்றே காரெழில் வண்ணனோடு கன கம்மனை யானுங்காணா ஆரழல் வண்ணமங்கை யய வந்தி யமர்ந்தவனே.
|
9
|
கங்கையோர் வார்சடைமே லடை யப்புடை யேகமழும் மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல லாவதொன்றே சங்கையில் லாமறையோ ரவர் தாந்தொழு சாத்தமங்கை அங்கையிற் சென்னிவைத்தா யயவந்தி யமர்ந்தவனே.
|
10
|
Go to top |
மறையினார் மல்குகாழித் தமிழ் ஞானசம் பந்தன்மன்னும் நிறையினார் நீலநக்க னெடு மாநக ரென்றுதொண்டர் அறையுமூர் சாத்தமங்கை யய வந்திமே லாய்ந்தபத்தும் முறைமையா லேத்தவல்லா ரிமை யோரிலு முந்துவரே.
|
11
|