மடன்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியு மத்தமுஞ் சடைமேற் படலொலி திரைகண் மோதிய கங்கைத் தலைவனார் தம்மிடம் பகரில் விடலொளி பரந்த வெண்டிரை முத்த மிப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக் கடலொலி யோத மோதவந் தலைக்குங் கழுமல நகரென லாமே.
|
1
|
மின்னிய வரவும் வெறிமலர் பலவும் விரும்பிய திங்களுந் தங்கு சென்னிய துடையான் றேவர்தம் பெருமான் சேயிழை யொடுமுறை விடமாம் பொன்னியன் மணியு முரிகரி மருப்புஞ் சந்தமு முந்துவன் றிரைகள் கன்னிய ராடக் கடலொலி மலியுங் கழுமல நகரென லாமே.
|
2
|
சீருறு தொண்டர் கொண்டடி போற்றச் செழுமலர் புனலொடு தூபந் தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார் தங்கிட மெங்கும் ஊருறு பதிக ளுலகுடன் பொங்கி யொலிபுனல் கொளவுடன் மிதந்த காருறு செம்மை நன்மையான் மிக்க கழுமல நகரென லாமே.
|
3
|
மண்ணினா ரேத்த வானுளார் பரச வந்தரத் தமரர்கள் போற்றப் பண்ணினா ரெல்லாம் பலபல வேட முடையவர் பயில்விட மெங்கும் எண்ணினான் மிக்கா ரியல்பினா னிறைந்தா ரேந்திழை யவரொடு மைந்தர் கண்ணினா லின்பங் கண்டொளி பரக்குங் கழுமல நகரென லாமே.
|
4
|
சுருதியான் றலையும் நாமகண் மூக்குஞ் சுடரவன் கரமுமுன் னியங்கு பரிதியான் பல்லு மிறுத்தவர்க் கருளும் பரமனார் பயின்றினி திருக்கை விருதினான் மறையு மங்கமோ ராறும் வேள்வியும் வேட்டவர் ஞானங் கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர் கழுமல நகரென லாமே.
|
5
|
Go to top |
புற்றில்வா ளரவு மாமையும் பூண்ட புனிதனார் பனிமலர்க் கொன்றை பற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த படிறனார் பயின்றினி திருக்கை செற்றுவன் றிரைக ளொன்றொடொன் றோடிச் செயிர்த்துவண் சங்கொடு வங்கங் கற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங் கழுமல நகரென லாமே.
|
6
|
அலைபுனற் கங்கை தங்கிய சடையா ரடனெடு மதிலொரு மூன்று கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட குழகனார் கோயில தென்பர் மலையின்மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்கு மற்றுமற் றிடையிடை யெங்குங் கலைகளித் தேறிக் கானலில் வாழுங் கழுமல நகரென லாமே.
|
7
|
ஒருக்கமுன் னினையாத் தக்கன்றன் வேள்வி யுடைதர வுழறிய படையார் அரக்கனை வரையா லாற்றலன் றழித்த வழகனா ரமர்ந்துறை கோயில் பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப் பலபல வறங்களே பயிற்றிக் கரக்குமா றறியா வண்மையார் வாழுங் கழுமல நகரென லாமே.
|
8
|
அருவரை பொறுத்த வாற்றலி னானு மணிகிளர் தாமரை யானும் இருவரு மேத்த வெரியுரு வான விறைவனா ருறைவிடம் வினவில் ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ண மொலிபுனல் வெள்ளமுன் பரப்பக் கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங் கழுமல நகரென லாமே.
|
9
|
உரிந்துய ருருவி லுடைதவிர்ந் தாரு மத்துகில் போர்த்துழல் வாருந் தெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச் செம்மையார் நன்மையா லுறைவாங் குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை கருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங் கழுமல நகரென லாமே.
|
10
|
Go to top |
கானலங் கழனி யோதம்வந் துலவுங் கழுமல நகருறை வார்மேல் ஞானசம் பந்த னற்றமிழ் மாலை நன்மையா லுரைசெய்து நவில்வார் ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி யுள்ளமு மொருவழிக் கொண்டு வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்றிதற் காணையும் நமதே.
|
11
|
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|