குண்டனாய்ச் சமண ரோடே கூடிநான் கொண்ட மாலைத் துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறி யாகி நின்ற அண்டனே யமர ரேறே திருவையா றமர்ந்த தேனே தொண்டனேன் றொழுதுன் பாதஞ் சொல்லி நான்றிரிகின் றேனே.
|
1
|
பீலிகை யிடுக்கி நாளும் பெரியதோர் தவமென் றெண்ணி வாலிய தறிகள் போல மதியிலார் பட்ட தென்னே வாலியார் வணங்கி யேத்துந் திருவையா றமர்ந்த தேனோ டாலியா வெழுந்த நெஞ்ச மழகிதா வெழுந்த வாறே.
|
2
|
தட்டிடு சமண ரோடே தருக்கிநான் றவமென் றெண்ணி ஒட்டிடு மனத்தி னீரே யும்மையான் செய்வ தென்னே மொட்டிடு கமலப் பொய்கைத் திருவையா றமர்ந்த தேனோ டொட்டிடு முள்ளத் தீரே யும்மைநா னுகந்திட் டேனே.
|
3
|
பாசிப்பன் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடு நேசத்தா லிருந்த நெஞ்சை நீக்குமா றறிய மாட்டேன் தேசத்தார் பரவி யேத்துந் திருவையா றமர்ந்த தேனை வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயு மன்றே.
|
4
|
கடுப்பொடி யட்டி மெய்யிற் கருதியோர் தவமென் றெண்ணி வடுக்களோ டிசைந்த நெஞ்சே மதியிலீ பட்ட தென்னே மடுக்களில் வாளை பாயுந் திருவையா றமர்ந்த தேனை அடுத்துநின் றுன்னு நெஞ்சே யருந்தவஞ் செய்த வாறே.
|
5
|
Go to top |
துறவியென் றவம தோரேன் சொல்லிய செலவு செய்து உறவினா லமண ரோடு முணர்விலே னுணர்வொன் றின்றி நறவமார் பொழில்கள் சூழ்ந்த திருவையா றமர்ந்த தேனை மறவிலா நெஞ்ச மேநன் மதியுனக் கடைந்த வாறே.
|
6
|
பல்லுரைச் சமண ரோடே பலபல கால மெல்லாம் சொல்லிய செலவு செய்தேன் சோர்வனா னினைந்த போது மல்லிகை மலருஞ் சோலைத் திருவையா றமர்ந்த தேனை எல்லியும் பகலு மெல்லா நினைந்தபோ தினிய வாறே.
|
7
|
மண்ணுளார் விண்ணு ளாரும் வணங்குவார் பாவம் போக எண்ணிலாச் சமண ரோடே யிசைந்தனை யேழை நெஞ்சே தெண்ணிலா வெறிக்குஞ் சென்னித் திருவையா றமர்ந்த தேனைக் கண்ணினாற் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்த வாறே.
|
8
|
குருந்தம தொசித்த மாலும் குலமலர் மேவி னானும் திருந்துநற் றிருவ டியுந் திருமுடி காண மாட்டார் அருந்தவ முனிவ ரேத்துந் திருவையா றமர்ந்த தேனைப் பொருந்திநின் றுன்னு நெஞ்சே பொய்வினை மாயு மன்றே.
|
9
|
அறிவிலா வரக்க னோடி யருவரை யெடுக்க லுற்று முறுகினான் முறுகக் கண்டு மூதறி வாள னோக்கி நிறுவினான் சிறு விரலா னெரிந்துபோய் நிலத்தில் வீழ அறிவினா லருள்கள் செய்தான் றிருவையா றமர்ந்த தேனே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|