சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.051   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கோடி (கோடிக்கரை) - திருநேரிசை அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=jI9dsAR0N9g   Add audio link Add Audio
நெற்றிமேற் கண்ணி னானே நீறுமெய் பூசி னானே
கற்றைப்புன் சடையி னானே கடல்விடம் பருகி னானே
செற்றவர் புரங்கண் மூன்றுஞ் செவ்வழல் செலுத்தி னானே
குற்றமில் குணத்தி னானே கோடிகா வுடைய கோவே.


1


கடிகமழ் கொன்றை யானே கபாலங்கை யேந்தி னானே
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகத் தானே
அடியிணை பரவ நாளு மடியவர்க் கருள் செய்வானே
கொடியணி விழவ தோவாக் கோடிகா வுடைய கோவே.


2


நீறுமெய் பூசி னானே நிழறிகழ் மழுவி னானே
ஏறுகந் தேறி னானே யிருங்கட லமுதொப் பானே
ஆறுமோர் நான்கு வேத மறமுரைத் தருளி னானே
கூறுமோர் பெண்ணி னானே கோடிகா வுடைய கோவே.


3


காலனைக் காலாற் செற்றன் றருள்புரி கருணை யானே
நீலமார் கண்டத் தானே நீண்முடி யமரர் கோவே
ஞாலமாம் பெருமை யானே நளிரிளந் திங்கள் சூடும்
கோலமார் சடையினானே கோடிகா வுடைய கோவே.


4


பூணர வாரத் தானே புலியுரி யரையி னானே
காணில்வெண் கோவ ணம்முங் கையிலோர் கபால மேந்தி
ஊணுமோர் பிச்சை யானே யுமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே கோடிகா வுடைய கோவே.


5


Go to top
கேழல்வெண் கொம்பு பூண்ட கிளரொளி மார்பி னானே
ஏழையே னேழை யேனா னென்செய்கே னெந்தை பெம்மான்
மாழையொண் கண்ணி னார்கள் வலைதனின் மயங்கு கின்றேன்
கூழையே றுடைய செல்வா கோடிகா வுடைய கோவே.


6


அழலுமி ழங்கை யானே யரிவையோர் பாகத் தானே
தழலுமி ழரவ மார்த்துத் தலைதனில் பலிகொள் வானே
நிழலுமிழ் சோலை சூழ நீள்வரி வண்டி னங்கள்
குழலுமிழ் கீதம் பாடுங் கோடிகா வுடைய கோவே.


7


ஏவடு சிலையி னானே புரமவை யெரிசெய் தானே
மாவடு வகிர்கொள் கண்ணாண் மலைமகள் பாகத் தானே
ஆவடு துறையு ளானே யைவரா லாட்டப் பட்டேன்
கோவடு குற்றந் தீராய் கோடிகா வுடைய கோவே.


8


ஏற்றநீர்க் கங்கை யானே யிருநிலந் தாவி னானும்
நாற்றமா மலர்மே லேறு நான்முக னிவர்கள் கூடி
ஆற்றலா லளக்க லுற்றார்க் கழலுரு வாயி னானே
கூற்றுக்குங் கூற்ற தானாய் கோடிகா வுடைய கோவே.


9


பழகநா னடிமை செய்வேன் பசுபதீ பாவ நாசா
மழகளி யானையின் றோன் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே யரக்கன் றிண்டோ ளருவரை நெரிய வூன்றும்
குழகனே கோல மார்பா கோடிகா வுடைய கோவே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கோடி (கோடிக்கரை)
2.099   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இன்று நன்று, நாளை நன்று
Tune - நட்டராகம்   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
4.051   திருநாவுக்கரசர்   தேவாரம்   நெற்றி மேல் கண்ணினானே! நீறு
Tune - திருநேரிசை   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
5.078   திருநாவுக்கரசர்   தேவாரம்   சங்கு உலாம் முன்கைத் தையல்
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
6.081   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண் தலம் சேர் நெற்றி
Tune - திருத்தாண்டகம்   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 4.051