சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.073   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருச்சேறை (உடையார்கோவில்) - திருநேரிசை அருள்தரு ஞானவல்லியம்மை உடனுறை அருள்மிகு சென்னெறியப்பர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=OvEOqME0sZc   Add audio link Add Audio
பெருந்திரு விமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் றவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பா லங்கொரு பாக மாகத்
திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.


1


ஓர்த்துள வாறு நோக்கி யுண்மையை யுணராக் குண்டர்
வார்த்தையை மெய்யென் றெண்ணி மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப்
பேர்த்தெனை யாளாக் கொண்டு பிறவிவான் பிணிக ளெல்லாம்
தீர்த்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.


2


ஒன்றிய தவத்து மன்னி யுடையனா யுலப்பில் காலம்
நின்றுதங் கழல்க ளேத்து நீள்சிலை விசய னுக்கு
வென்றிகொள் வேட னாகி விரும்பிவெங் கான கத்துச்
சென்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.


3


அஞ்சையு மடக்கி யாற்ற லுடையனா யநேக காலம்
வஞ்சமி றவத்து ணின்று மன்னிய பகீர தற்கு
வெஞ்சின முகங்க ளாகி விசையொடு பாயுங் கங்கை
செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.


4


நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோ டாவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு கறுத்ததன் றாதை தாளை
எறிந்த மா ணிக்கப் போதே யெழில்கொள்சண் டீச னென்னச்
சிறந்தபே றளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.


5


Go to top
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.


6


சுற்றுமுன் னிமையோர் நின்று தொழுதுதூ மலர்கள் தூவி
மற்றெமை யுயக்கொ ளென்ன மன்னுவான் புரங்கண் மூன்றும்
உற்றொரு நொடியின் முன்ன மொள்ளழல் வாயின் வீழச்
செற்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.


7


முந்தியிவ் வுலக மெல்லாம் படைத்தவன் மாலி னோடும்
எந்தனி நாத னேயென் றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை யடிமுடி யறியா வண்ணம்
செந்தழ லானார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.


8


ஒருவரு நிகரி லாத வொண்டிற லரக்க னோடிப்
பெருவரை யெடுத்த திண்டோள் பிறங்கிய முடிக ளிற்று
மருவியெம் பெருமா னென்ன மலரடி மெல்ல வாங்கித்
திருவருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.


9



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சேறை (உடையார்கோவில்)
3.086   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முறி உறு நிறம் மல்கு
Tune - சாதாரி   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
4.073   திருநாவுக்கரசர்   தேவாரம்   பெருந் திரு இமவான் பெற்ற
Tune - திருநேரிசை   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
5.077   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூரியா வரும், புண்ணியம்; பொய்
Tune - திருக்குறுந்தொகை   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 4.073