குறுவித்த வாகுற்ற நோய்வினை காட்டிக் குறுவித்தநோய் உறுவித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பா னுகந்தருளி அறிவித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே செறிவித்தவாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
|
1
|
கூர்வித்த வாகுற்ற நோய்வினை காட்டியுங் கூர்வித்தநோய் ஊர்வித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பா னுகந்தருளி ஆர்வித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே சேர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
|
2
|
தாக்கின வாசல மேவினை காட்டியுந் தண்டித்தநோய் நீக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளி ஆக்கின வாறடி யேனையை யாற னடிமைக்களே நோக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
|
3
|
தருக்கின நான்றக வின்றியு மோடச் சலமதனால் நெருக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளி உருக்கின வாறடி யேனையை யாற னடிமைக்களே பெருக்கின வாதொண்டனேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
|
4
|
இழிவித்த வாறிட்ட நோய்வினை காட்டி யிடர்ப்படுத்துக் கழிவித்த வாகட்ட நோய்வினை தீர்ப்பான் கலந்தருளி அழிவித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே தொழுவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
|
5
|
Go to top |
இடைவித்த வாறிட்ட நோய்வினை காட்டி யிடர்ப்படுத்து உடைவித்த வாறுற்ற நோய்வினை தீர்ப்பா னுகந்தருளி அடைவித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
|
6
|
படக்கின வாபட நின்றுபன் னாளும் படக்கினநோய் அடக்கின வாறது வன்றியுந் தீவினை பாவமெல்லா மடக்கின வாறடி யேனையை யாற னடிமைக்களே தொடக்கினவா தொண்டனேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
|
7
|
மறப்பித்த வாவல்லை நோய்வினை காட்டி மறப்பித்தநோய் துறப்பித்த வாதுக்க நோய்வினை தீர்ப்பா னுகந்தருளி இறப்பித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
|
8
|
துயக்கின வாதுக்க நோய்வினை காட்டித் துயக்கினநோய் இயக்கின வாறிட்ட நோய்வினை தீர்ப்பா னிசைந்தருளி அயக்கின வாறடி யேனையை யாற னடிமைக்களே மயக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
|
9
|
கறுத்துமிட் டார்கண்டங் கங்கை சடைமேற் கரந்தருளி இறுத்துமிட் டாரிலங் கைக்கிறை தன்னை யிருபதுதோள் அறுத்துமிட் டாரடி யேனையை யாற னடிமைக்களே பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|