சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன் முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி அந்திப் பிறையணிந் தாடுமை யாற னடித்தலமே.
|
1
|
இழித்தன வேழேழ் பிறப்பு மறுத்தன வென்மனத்தே பொழித்தன போரெழிற் கூற்றை யுதைத்தன போற்றவர்க்காய்க் கிழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழமுன்சென் றழித்தன வாறங்க மானவை யாற னடித்தலமே.
|
2
|
மணிநிற மொப்பன பொன்னிற மன்னின மின்னியல்வாய் கணிநிற மன்ன கயிலைப் பொருப்பன காதல்செய்யத் துணிவன சீலத்த ராகித் தொடர்ந்து விடாததொண்டர்க் கணியன சேயன தேவர்க்கை யாற னடித்தலமே.
|
3
|
இருடரு துன்பப் படல மறைப்பமெய்ஞ் ஞானமென்னும் பொருடரு கண்ணிழந் துண்பொரு ணாடிப் புகலிழந்த குருடருந் தம்மைப் பரவக் கொடுநர கக்குழிநின் றருடரு கைகொடுத் தேற்றுமை யாற னடித்தலமே.
|
4
|
எழுவா யிறுவா யிலாதன வெங்கட் பிணிதவிர்த்து வழுவா மருத்துவ மாவன மாநர கக்குழிவாய் விழுவா ரவர்தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்கவன்போ டழுவார்க் கமுதங்கள் காண்கவை யாற னடித்தலமே.
|
5
|
Go to top |
துன்பக் கடலிடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர் தம்மை இன்பக் கரைமுகந் தேற்றுந் திறத்தன மாற்றயலே பொன்பட் டொழுகப் பொருந்தொளி செய்யுமப் பொய் பொருந்தா அன்பர்க் கணியன காண்கவை யாற னடித்தலமே.
|
6
|
களித்துக் கலந்ததொர் காதற் கசிவொடு காவிரிவாய்க் குளித்துத் தொழுதுமுன் னின்றவிப் பத்தரைக் கோதில்செந்தேன் தெளித்துச் சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப அளித்துப் பெருஞ்செல்வ மாக்குமை யாற னடித்தலமே.
|
7
|
திருத்திக் கருத்தனைச் செவ்வே நிறுத்திச் செறுத்துடலை வருத்திக் கடிமலர் வாளொடுத் தோச்சி மருங்குசென்று விருத்திக் குழக்கவல் லோர்கட்கு விண்பட் டிகையிடுமால் அருத்தித் தருந்தவ ரேத்துமை யாற னடித்தலமே.
|
8
|
பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய் கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள் நீடுங் குழல்செய்ய வைய நெளிய நிணப்பிணக்காட் டாடுந் திருவடி காண்கவை யாற னடித்தலமே.
|
9
|
நின்போ லமரர்க ணீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியா என்போ லிகள்பறித் திட்ட விலையு முகையுமெல்லாம் அம்போ தெனக்கொள்ளு மையனை யாற னடித்தலமே.
|
10
|
Go to top |
மலையார் மடந்தை மனத்தன வானோர் மகுடமன்னி நிலையா யிருப்பன நின்றோர் மதிப்பன நீணிலத்துப் புலையாடு புன்மை தவிர்ப்பன பொன்னுல கம்மளிக்கும் அலையார் புனற்பொன்னி சூழ்ந்தவை யாற னடித்தலமே.
|
11
|
பொலம்புண்டரீகப் புதுமலர் போல்வன போற்றியென்பார் புலம்பும் பொழுதும் புணர்துணை யாவன பொன்னனையாள் சிலம்புஞ் செறிபா டகமுஞ் செழுங்கிண் கிணித்திரளும் அலம்புந் திருவடி காண்கவை யாற னடித்தலமே.
|
12
|
உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன வோதிநன்னூல் கற்றார் பரவப் பெருமை யுடையன காதல்செய்ய கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந் தான்கொடுக்கும் அற்றார்க் கரும்பொருள் காண்கவை யாற னடித்தலமே.
|
13
|
வானைக் கடந்தண்டத் தப்பான் மதிப்பன மந்திரிப்பார் ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன வுத்தமர்க்கு ஞானச் சுடராய் நடுவே யுதிப்பன நங்கையஞ்ச ஆனை யுரித்தன காண்கவை யாற னடித்தலமே.
|
14
|
மாதிர மானில மாவன வானவர் மாமுகட்டின் மீதன மென்கழல் வெங்கச்சு வீக்கின வெந்நமனார் தூதரை யோடத் துரப்பன துன்பறத் தொண்டுபட்டார்க் காதர மாவன காண்கவை யாற னடித்தலமே.
|
15
|
Go to top |
பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால் ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை யோர்முடிமேல் மாணிக்க மொத்து மரகதம் போன்று வயிரமன்னி ஆணிக் கனகமு மொக்குமை யாற னடித்தலமே.
|
16
|
ஓதிய ஞானமும் ஞானப் பொருளு மொலிசிறந்த வேதியர் வேதமும் வேள்வியு மாவன விண்ணுமண்ணும் சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன தூமதியோ டாதியு மந்தமு மானவை யாற னடித்தலமே.
|
17
|
சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை சுரும்பொடுவண் டணங்குங் குழலி யணியார் வளைக்கரங் கூப்பிநின்று வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும்வண் காந்தளொண்போ தணங்கு மரவிந்த மொக்குமை யாற னடித்தலமே.
|
18
|
சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னும் நிழலா வனவென்றும் நீங்காப் பிறவி நிலைகெடுத்துக் கழலா வினைகள் கழற்றுவ கால வனங்கடந்த அழலா ரொளியன காண்கவை யாற னடித்தலமே.
|
19
|
வலியான் றலைபத்தும் வாய்விட்டலற வரையடர்த்து மெலியா வலியுடைக் கூற்றை யுதைத்துவிண் ணோர்கண்முன்னே பலிசேர் படுகடைப் பார்த்துப்பன் னாளும் பலரிகழ அலியா நிலைநிற்கு மையனை யாற னடித்தலமே.
|
20
|
Go to top |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|