சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.032   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை அருள்தரு அழகாலமர்ந்தநாயகி உடனுறை அருள்மிகு புஷ்பவனநாதர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=MlvS1d5hqqg   Add audio link Add Audio
கொடிகொள் செல்வ விழாக்குண லைஅறாக்
கடிகொள் பூம்பொழிற் கச்சியே கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.


1


ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப்
பார்த்த னோடு படைதொடு மாகிலும்
பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த்
தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.


2


மாதி னைமதித் தானொரு பாகமாக்
காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப்
பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க்
காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே.


3


மூவ னாய்முத லாயிவ் வுலகெலாம்
காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன் பூந்துருத் திந்நகர்த்
தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.


4


செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்
உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்
பொன்பொன் னார் செல்வப் பூந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.


5


Go to top
வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக்
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச்
செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.


6


ஒருத்த னாயுல கேழுந் தொழநின்று
பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும்
பொருத்த னாகிலும் பூந்துருத் திந்நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.


7


அதிரர் தேவ ரியக்கர் விச் சாதரர்
கருத நின்றவர் காண்பரி தாயினான்
பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச்
சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.


8


செதுக றாமனத் தார்புறங் கூறினும்
கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்
பொதுவி னாயகன் பூந்துருத் திந்நகர்க்
கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.


9


துடித்த தோள்வலி வாளரக் கன்தனைப்
பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம்
பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப்
படிகொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பூந்துருத்தி
4.088   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாலினை மால் உற நின்றான்,
Tune - திருவிருத்தம்   (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
5.032   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொடி கொள் செல்வ விழாக்
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
6.043   திருநாவுக்கரசர்   தேவாரம்   நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை;
Tune - திருத்தாண்டகம்   (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 5.032