கல்வாய்அகி லுங்கதிர் மாமணியுங் கலந்துந்தி வருந்நிவ வின்கரைமேல் நெல்வாயி லரத்துறை நீடுறையுந் நிலவெண்மதி சூடிய நின்மலனே நல்வாயில்செய் தார்நடந் தார்உடுத்தார் நரைத்தார்இறந் தார்என்று நானிலத்தில் சொல்லாய்க்கழி கின்ற தறிந்தடியேன் தொடர்ந்தேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.
|
1
|
கறிமாமிள கும்மிகு வன்மரமும் மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல் நெறிவார்குழ லாரவர் காணடஞ்செய் நெல்வாயி லரத்துறை நின்மலனே வறிதேநிலை யாதஇம் மண்ணுலகின் நரனாக வகுத்தனை நானிலையேன் பொறிவாயில்இவ் வைந்தினை யும்மவியப் பொருதுன்னடி யேபுகுஞ் சூழல்சொல்லே.
|
2
|
புற்றாடர வம்மரை ஆர்த்துகந்தாய் புனிதாபொரு வெள்விடை யூர்தியினாய் எற்றேஒரு கண்ணிலன் நின்னையல்லால் நெல்வாயி லரத்துறை நின்மலனே மற்றேல்ஒரு பற்றிலன் எம்பெருமான் வண்டார்குழ லாள்மங்கை பங்கினனே அற்றார்பிற விக்கடல் நீந்தியேறி அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.
|
3
|
கோஓடுயர் கோங்கலர் வேங்கையலர் மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல் நீஇடுயர் சோலைநெல் வாயிலரத் துறைநின்மல னேநினை வார்மனத்தாய் ஓஒடுபு னற்கரை யாம்இளமை உறங்கிவ்விழித் தாலொக்கும் இப்பிறவி வாஅடியி ருந்துவருந் தல்செய்யா தடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.
|
4
|
உலவும்முகி லிற்றலை கற்பொழிய உயர்வேயொ டிழிநிவ வின்கரைமேல் நிலவும்மயி லாரவர் தாம்பயிலும் நெல்வாயி லரத்துறை நின்மலனே புலன்ஐந்து மயங்கி அகங்குழையப் பொருவேலொர் நமன்றமர் தாம்நலிய அலமந்தும யங்கி அயர்வதன்முன் அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.
|
5
|
Go to top |
ஏலம்மில வங்கம் எழிற்கனகம் மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல் நீலம்மலர்ப் பொய்கையில் அன்னமலி நெல்வாயி லரத்துறை யாய்ஒருநெல் வாலூன்ற வருந்தும் உடம்பிதனை மகிழாதழ காஅலந் தேன்இனியான் ஆலந்நிழ லில்லமர்ந் தாய்அமரா அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.
|
6
|
சிகரம்முகத் திற்றிர ளாரகிலும் மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல் நிகரின்மயி லாரவர் தாம்பயிலுந் நெல்வாயி லரத்துறை நின்மலனே மகரக்குழை யாய்மணக் கோலமதே பிணக்கோலம தாம்பிற வியிதுதான் அகரம்முத லின்னெழுத் தாகிநின்றாய் அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.
|
7
|
திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன் திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின் நெல்வாயி லரத்துறை நின்மலனே பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற் பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன் அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான் அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.
|
8
|
மாணாவுரு வாகியொர் மண்ணளந்தான் மலர்மேலவன் நேடியுங் காண்பரியாய் நீணீண்முடி வானவர் வந்திறைஞ்சுந் நெல்வாயி லரத்துறை நின்மலனே வாணார்நுத லார்வலைப்பட் டடியேன் பலவின்கனி ஈயது போல்வதன்முன் ஆணோடுபெண் ணாமுரு வாகிநின்றாய் அடியேனுய்யப் போவதொர் சூழல்சொல்லே.
|
9
|
நீரூரு நெடுவயல் சூழ்புறவின் நெல்வாயி லரத்துறை நின்மலனைத் தேரூர்நெடு வீதிநன் மாடமலி தென்னாவலர் கோனடித் தொண்டன்அணி ஆரூரன் உரைத்தன நற்றமிழின் மிகுமாலையொர் பத்திவை கற்றுவல்லார் காரூர்களி வண்டறை யானைமன்ன ரவராகியொர் விண்முழு தாள்பவரே.
|
10
|
Go to top |