மலைக்கும்மக ளஞ்ச மதகரியை உரித்தீர்எரித் தீர்வரு முப்புரங்கள் சிலைக்குங்கொலைச் சேவுகந் தேறொழியீர் சில்பலிக்கில்கள் தோறுஞ் செலவொழியீர் கலைக்கொம்புங் கரிமருப் பும்மிடறிக் கலவம்மயிற் பீலியுங் காரகிலும் அலைக்கும்புனல் சேரரி சிற்றென்கரை அழகார்திருப் புத்தூர் அழகனீரே.
|
1
|
அருமல ரோன்சிரம் ஒன்றறுத்தீர் செறுத்தீர்அழற் சூலத்தில் அந்தகனைத் திருமகள் கோனெடு மால்பலநாள் சிறப்பாகிய பூசனை செய்பொழுதில் ஒருமலர் ஆயிரத் திற்குறைவா நிறைவாகவோர் கண்மலர் சூட்டலுமே பொருவிறல் ஆழி புரிந்தளித்தீர் பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
|
2
|
தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ் சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர் சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித் தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால் முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும் முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை அழகார்திருப் புத்தூர் அழகனீரே.
|
3
|
கொடியுடை மும்மதில் வெந்தழியக் குன்றம்வில்லா நாணியிற் கோலொன்றினால் இடிபட எய்தெரித் தீர்இமைக்கும் மளவில்லுமக் காரெதிர் எம்பெருமான் கடிபடு பூங்கணை யான்கருப்புச் சிலைக்காமனை வேவக் கடைக்கண்ணினால் பொடிபட நோக்கிய தென்னைகொல்லோ பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
|
4
|
வணங்கித்தொழு வாரவர் மால்பிரமன் மற்றும்வானவர் தானவர் மாமுனிவர் உணங்கற்றலை யிற்பலி கொண்டலென்னே உலகங்களெல் லாமுடையீர் உரையீர் இணங்கிக்கயல் சேல்இள வாளைபாய இனக்கெண்டைதுள் ளக்கண் டிருந்தஅன்னம் அணங்கிக்குணங் கொள்ளரி சிற்றென்கரை அழகார்திருப் புத்தூர் அழகனீரே.
|
5
|
Go to top |
அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான் அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான் மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும் முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும் வகுத்தவ னுக்குநித் தற்படியும் வரும்என்றொரு காசினை நின்றநன்றிப் புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர் பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
|
6
|
பழிக்கும்பெருந் தக்கன்எச் சம்மழியப் பகலோன்முத லாப்பல தேவரையும் தெழித்திட்டவர் அங்கஞ் சிதைத்தருளுஞ் செய்கையென்னைகொ லோமைகொள் செம்மிடற்றீர் விழிக்குந்தழைப் பீலியொ டேலமுந்தி விளங்கும்மணி முத்தொடு பொன்வரன்றி அழிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை அழகார்திருப் புத்தூர் அழகனீரே.
|
7
|
பறைக்கண்ணெடும் பேய்க்கணம் பாடல்செய்யக் குறட்பாரிடங் கள்பறை தாம்முழக்கப் பிறைக்கொள்சடை தாழப் பெயர்ந்துநட்டம் பெருங்காடரங் காகநின் றாடலென்னே கறைக்கொள்மணி கண்டமுந் திண்டோள்களுங் கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப் பொறிக்கொள்ளர வம்புனைந் தீர்பலவும் பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
|
8
|
மழைக்கண்மட வாளையொர் பாகம்வைத்தீர் வளர்புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர் முழைக்கொள்ளர வோடென் பணிகலனா முழுநீறுமெய் பூசுதல் என்னைகொலோ கழைக்கொள்கரும் புங்கத லிக்கனியுங் கமுகின்பழுக் காயுங் கவர்ந்துகொண்டிட் டழைக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை அழகார்திருப் புத்தூர் அழகனீரே.
|
9
|
கடிக்கும்மர வால்மலை யாலமரர் கடலைக்கடை யவ்வெழு காளகூடம் ஒடிக்கும்முல கங்களை யென்றதனை உமக்கேஅமு தாகவுண்டீர் உமிழீர் இடிக்கும்மழை வீழ்த்திழுத் திட்டருவி யிருபாலுமோ டிய்யிரைக் குந்திரைக்கை அடிக்கும்புனல் சேரரி சிற்றென்கரை அழகார்திருப் புத்தூர் அழகனீரே.
|
10
|
Go to top |
காரூர்மழை பெய்து பொழிஅருவிக் கழையோடகில் உந்திட் டிருகரையும் போரூர்புனல் சேர்அரி சிற்றென்கரைப் பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதர்தம்மை ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடைந் தழகால்உரைப் பார்களுங் கேட்பவரும் சீரூர்தரு தேவர்க ணங்களொடும் இணங்கிச்சிவ லோகம தெய்துவரே.
|
11
|