மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லை சேர்ப்பது காட்டகத் தூரினு மாகச்சிந் திக்கினல்லால் காப்பது வேள்விக் குடிதண் துருத்திஎங் கோன்அரைமேல் ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம்இவர்க் காட்படோமே.
|
1
|
கட்டக்காட் டின்னட மாடுவ ரியாவர்க்கும் காட்சியொண்ணார் சுட்டவெண் ணீறணிந் தாடுவர் பாடுவர் தூயநெய்யால் வட்டக்குண் டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார் அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல் நாம்இவர்க் காட்படோமே.
|
2
|
பேருமோர் ஆயிரம் பேருடை யார்பெண்ணோ டாணுமல்லர் ஊரும தொற்றியூர் மற்றையூர் பெற்றவா நாமறியோம் காருங் கருங்கடல் நஞ்சமு துண்டுகண் டங்கறுத்தார்க் காரம்பாம் பாவ தறிந்தோமேல் நாம்இவர்க் காட்படோமே.
|
3
|
ஏனக்கொம் பும்மிள வாமையும் பூண்டங்கோர் ஏறுமேறிக் கானக்காட் டிற்றொண்டர் கண்டன சொல்லியுங் காமுறவே மானைத்தோல் ஒன்றுடுத் துப்புலித் தோஒல் பியற்குமிட்டி யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல் நாம்இவர்க் காட்படோமே.
|
4
|
ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர் ஊரிடு பிச்சையல்லால் பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர் ஏறியொர் பூதந்தம்பால் பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ றும்பல பாம்புபற்றி ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல் நாம்இவர்க் காட்படோமே.
|
5
|
Go to top |
குறவனார் தம்மகள் தம்மக னார்மண வாட்டிகொல்லை மறவனா ராய்அங்கோர் பன்றிப்பின் போவது மாயங்கண்டீர் இறைவனார் ஆதியார் சோதியா ராய்அங்கோர் சோர்வுபடா அறவனா ராவ தறிந்தோமேல் நாம்இவர்க் காட்படோமே.
|
6
|
பித்தரை ஒத்தொரு பெற்றியர் நற்றவை என்னைப்பெற்ற முற்றவை தம்மனை தந்தைக்குந் தவ்வைக்குந் தம்பிரானார் செத்தவர் தந்தலை யிற்பலி கொள்வதே செல்வமாகி அத்தவ மாவ தறிந்தோமேல் நாம்இவர்க் காட்படோமே.
|
7
|
உம்பரான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலர்உறைவான் தம்பர மல்லவர் சிந்திப் பவர்தடு மாற்றறுப்பார் எம்பர மல்லவர் என்னெஞ்சத் துள்ளும் இருப்பதாகி அம்பர மாவ தறிந்தோமேல் நாம்இவர்க் காட்படோமே.
|
8
|
இந்திர னுக்கும் இராவண னுக்கும் அருள்புரிந்தார் மந்திரம் ஓதுவர் மாமறை பாடுவர் மான்மறியர் சிந்துரக் கண்ணனும் நான்முக னும்முட னாய்த்தனியே அந்தரஞ் செல்வ தறிந்தோமேல் நாம்இவர்க் காட்படோமே.
|
9
|
கூடலர் மன்னன் குலநாவ லூர்க்கோன் நலத்தமிழைப் பாடவல் லபர மன்னடி யார்க்கடி மைவழுவா நாடவல் லதொண்டன் ஆரூரன் ஆட்படு மாறுசொல்லிப் பாடவல் லார்பர லோகத் திருப்பது பண்டமன்றே.
|
10
|
Go to top |