பொன்செய்த மேனியினீர் புலித் தோலை அரைக்கசைத்தீர் முன்செய்த மூவெயிலும் மெரித் தீர்முது குன்றமர்ந்தீர் மின்செய்த நுண்ணிடையாள் பர வையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள் அடி யேன்இட் டளங்கெடவே.
|
1
|
உம்பரும் வானவரும் முட னேநிற்க வேயெனக்குச் செம்பொனைத் தந்தருளித் திக ழும்முது குன்றமர்ந்தீர் வம்பம ருங்குழலாள் பர வையிவள் வாடுகின்றாள் எம்பெரு மான்அருளீர் அடி யேன்இட் டளங்கெடவே.
|
2
|
பத்தா பத்தர்களுக் கருள் செய்யும் பரம்பரனே முத்தா முக்கணனே முது குன்ற மமர்ந்தவனே மைத்தா ருந்தடங்கண் பர வையிவள் வாடாமே அத்தா தந்தருளாய் அடி யேன்இட் டளங்கெடவே.
|
3
|
மங்கையொர் கூறமர்ந்தீர் மறை நான்கும் விரித்துகந்தீர் திங்கள் சடைக்கணிந்தீர் திக ழும்முது குன்றமர்ந்தீர் கொங்கைநல் லாள்பரவை குணங் கொண்டிருந் தாள்முகப்பே அங்கண னேயருளாய் அடி யேன்இட் டளங்கெடவே.
|
4
|
மையா ரும்மிடற்றாய் மரு வார்புர மூன்றெரித்த செய்யார் மேனியனே திக ழும்முது குன்றமர்ந்தாய் பையா ரும்மரவே ரல்கு லாளிவள் வாடுகின்றாள் ஐயா தந்தருளாய் அடி யேன்இட் டளங்கெடவே.
|
5
|
Go to top |
நெடியான் நான்முகனும் மிர வியொடும் இந்திரனும் முடியால் வந்திறைஞ்ச முது குன்றம் அமர்ந்தவனே படியா ரும்மியலாள் பர வையிவள் தன்முகப்பே யடிகேள் தந்தருளீர் அடி யேன்இட் டளங்கெடவே.
|
6
|
கொந்தண வும்பொழில்சூழ் குளிர் மாமதில் மாளிகைமேல் வந்தண வும்மதிசேர் சடை மாமுது குன்றுடையாய் பந்தண வும்விரலாள் பர வையிவள் தன்முகப்பே அந்தண னேயருளாய் அடி யேன்இட் டளங்கெடவே.
|
7
|
பரசா ருங்கரவா பதி னெண்கண முஞ்சூழ முரசார் வந்ததிர முது குன்ற மமர்ந்தவனே விரைசே ருங்குழலாள் பர வையிவள் தன்முகப்பே அரசே தந்தருளாய் அடி யேன்இட் டளங்கெடவே.
|
8
|
ஏத்தா திருந்தறியேன் இமை யோர்தனி நாயகனே மூத்தாய் உலகுக்கெல்லா முது குன்ற மமர்ந்தவனே பூத்தா ருங்குழலாள் பர வையிவள் தன்முகப்பே கூத்தா தந்தருளாய் கொடி யேன்இட் டளங்கெடவே.
|
9
|
பிறையா ருஞ்சடையெம் பெரு மானரு ளாயென்று முறையால் வந்தமரர் வணங் கும்முது குன்றர்தம்மை மறையார் தங்குரிசில் வயல் நாவலா ரூரன்சொன்ன இறையார் பாடல்வல்லார்க் கெளி தாஞ்சிவ லோகமதே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.012
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மத்தா வரை நிறுவி, கடல்
Tune - நட்டபாடை
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.053
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
Tune - பழந்தக்கராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.093
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நின்று மலர் தூவி, இன்று
Tune - குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.131
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
2.064
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
Tune - காந்தாரம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்ண மா மலர் கொடு
Tune - கொல்லி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.099
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முரசு அதிர்ந்து எழுதரு முது
Tune - சாதாரி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
6.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
Tune - திருத்தாண்டகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.025
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
Tune - நட்டராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.043
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நஞ்சி, இடை இன்று நாளை
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|