காரு லாவிய நஞ்சை யுண்டிருள் கண்டர் வெண்டலை யோடுகொண் டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி ஓரி டத்திலே கொள்ளும் நீர் பாரெ லாம்பணிந் தும்மை யேபர விப்ப ணியும்பைஞ் ஞீலியீர் ஆர மாவது நாக மோசொலும் ஆர ணீய விடங்கரே.
|
1
|
சிலைத்து நோக்கும்வெள் ளேறு செந்தழல் வாய பாம்பது மூசெனும் பலிக்கு நீர்வரும் போது நுங்கையிற் பாம்பு வேண்டா பிரானிரே மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு காரகில் சண்பகம் அலைக்கும் பைம்புனல் சூழ்பைஞ் ஞீலியில் ஆர ணீய விடங்கரே.
|
2
|
தூய வர்கண்ணும் வாயும் மேனியுந் துன்ன ஆடை சுடலையில் பேயொ டாடலைத் தவிரும் நீரொரு பித்த ரோஎம் பிரானிரே பாயும் நீர்க்கிடங் கார்க மலமும் பைந்தண் மாதவி புன்னையும் ஆய பைம்பொழில் சூழ்பைஞ் ஞீலியில் ஆர ணீய விடங்கரே.
|
3
|
செந்த மிழ்த்திறம் வல்லி ரோசெங்கண் அரவம் முன்கையில் ஆடவே வந்து நிற்குமி தென்கொ லோபலி மாற்ற மாட்டோ மிடகிலோம் பைந்தண் மாமலர் உந்து சோலைகள் கந்த நாறுபைஞ் ஞீலியீர் அந்தி வானமும் மேனி யோசொலும் ஆர ணீய விடங்கரே.
|
4
|
நீறு நுந்திரு மேனி நித்திலம் நீல்நெ டுங்கண்ணி னாளொடும் கூற ராய்வந்து நிற்றி ராற்கொணர்ந் திடகி லோம்பலி நடமினோ பாறு வெண்டலை கையி லேந்திப்பைஞ் ஞீலி யேனென்றீ ரடிகள்நீர் ஆறு தாங்கிய சடைய ரோசொலும் ஆர ணீய விடங்கரே.
|
5
|
Go to top |
குரவம் நாறிய குழலி னார்வளை கொள்வ தேதொழி லாகிநீர் இரவும் இம்மனை அறிதி ரேஇங்கே நடந்து போகவும் வல்லிரே பரவி நாடொறும் பாடு வார்வினை பற்ற றுக்கும்பைஞ் ஞீலியீர் அரவம் ஆட்டவும் வல்லி ரோசொலும் ஆர ணீய விடங்கரே.
|
6
|
ஏடு லாமலர்க் கொன்றை சூடுதிர் என்பெ லாமணிந் தென்செய்வீர் காடு நும்பதி ஓடு கையது காதல் செய்பவர் பெறுவதென் பாடல் வண்டிசை யாலுஞ் சோலைப்பைஞ் ஞீலி யேனென்று நிற்றிரால் ஆடல் பாடலும் வல்லி ரோசொலும் ஆர ணீய விடங்கரே.
|
7
|
மத்த மாமலர்க் கொன்றை வன்னியுங் கங்கை யாளொடு திங்களும் மொய்த்த வெண்டலை கொக்கி றஃகொடு வெள்ளெ ருக்கமுஞ் சடையதாம் பத்தர் சித்தர்கள் பாடி யாடும்பைஞ் ஞீலி யேனென்று நிற்றிரால் அத்தி யீருரி போர்த்தி ரோசொலும் ஆர ணீய விடங்கரே.
|
8
|
தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச் சங்கிணை சல்லரி கொக்க ரைகுட முழவி னோடிசை கூடிப் பாடிநின் றாடுவீர் பக்க மேகுயில் பாடுஞ் சோலைப்பைஞ் ஞீலி யேனென்று நிற்றிரால் அக்கும் ஆமையும் பூண்டி ரோசொலும் ஆர ணீய விடங்கரே.
|
9
|
கையொர் பாம்பரை யார்த்தொர் பாம்பு கழுத்தொர் பாம்பவை பின்புதாழ் மெய்யெ லாம்பொடிக் கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும் பைய வேவிடங் காக நின்றுபைஞ் ஞீலி யேனென்றீ ரடிகள்நீர் ஐயம் ஏற்குமி தென்கொ லோசொலும் ஆர ணீய விடங்கரே.
|
10
|
Go to top |
அன்னஞ் சேர்வயல் சூழ்பைஞ் ஞீலியில் ஆர ணீய விடங்கரை மின்னு நுண்ணிடை மங்கை மார்பலர் வேண்டிக் காதல் மொழிந்தசொல் மன்னு தொல்புகழ் நாவ லூரன்வன் றொண்டன் வாய்மொழி பாடல்பத் துன்னி இன்னிசை பாடு வார்உமை கேள்வன் சேவடி சேர்வரே.
|
11
|