பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன் இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான் கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை அரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ !
|
1
|
எங்கே போவே னாயிடினும் அங்கே வந்தென் மனத்தீராய்ச் சங்கை யொன்று மின்றியே தலைநாள் கடைநா ளொக்கவே கங்கை சடைமேற் கரந்தானே கலைமான் மறியுங் கனல்மழுவும் தங்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ !
|
2
|
மருவிப் பிரிய மாட்டேன் நான் வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன் பருவி விச்சி மலைச்சாரற் பட்டை கொண்டு பகடாடிக் குருவி யோப்பிக் கிளிகடிவார் குழல்மேல் மாலை கொண்டோட்டம் தரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ !
|
3
|
பழகா நின்று பணிசெய்வார் பெற்ற பயனொன் றறிகிலேன் இகழா துமக்காட் பட்டோர்க்கு வேக படமொன் றரைச்சாத்திக் குழகா வாழைக் குலைதெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே அழகார் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ !
|
4
|
பிழைத்த பிழையொன் றறியேன்நான் பிழையைத் தீரப் பணியாயே மழைக்கண் நல்லார் குடைந்தாட மலையும் நிலனுங் கொள்ளாமைக் கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங் கழனி மண்டிக் கையேறி அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ !
|
5
|
Go to top |
கார்க்கொள் கொன்றை சடைமேலொன் றுடையாய் விடையாய் கையினான் மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய் முன்நீ பின்நீ முதல்வன்நீ வார்கொள் அருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னுங்கொண் டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ !
|
6
|
மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலிதேர்வாய் சிலைக்கொள் கணையால் எயில்எய்த செங்கண் விடையாய் தீர்த்தன்நீ மலைக்கொள் அருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னுங்கொண் டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ !
|
7
|
போழும் மதியும் புனக்கொன்றை புனல்சேர் சென்னிப் புண்ணியா சூழும் அரவச் சுடர்ச்சோதீ உன்னைத் தொழுவார் துயர்போக வாழும் அவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்தாட்ட ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ !
|
8
|
கதிர்க்கொள் பசியே யொத்தேநான் கண்டே னும்மைக் காணாதேன் எதிர்த்து நீந்த மாட்டேன்நான் எம்மான் றம்மான் தம்மானே விதிர்த்து மேகம் மழைபொழிய வெள்ளம் பரந்து நுரைசிதறி அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ !
|
9
|
கூசி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர் தேச வேந்தன் திருமாலும் மலர்மேல் அயனுங் காண்கிலார் தேசம் எங்கும் தெளிந்தாடத் தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும் வாசந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ !
|
10
|
Go to top |
கூடி அடியார் இருந்தாலும் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர் ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மைத் தொண்டன் ஊரனேன் தேடி எங்குங் காண்கிலேன் திருவா ரூரே சிந்திப்பன் ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ !
|
11
|
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|