சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருத்தேவூர் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு தேன்மொழியம்மை உடனுறை அருள்மிகு தேவகுருநாதர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=fYnixUyPNIE   Add audio link Add Audio

பண் நிலாவிய மொழி உமை பங்கன், எம்பெருமான்,
விண்ணில் வானவர்கோன், விமலன், விடை ஊர்தி
தெண் நிலா மதி தவழ் தரு மாளிகைத் தேவூர்
அண்ணல்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

1

ஓதி மண் தலத்தோர் முழுது உய்ய, வெற்பு ஏறு
சோதி வானவன் துதிசெய, மகிழ்ந்தவன் தூ நீர்த்
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம்மலர் தேவூர்
ஆதி; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

2

மறைகளால் மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்ட அக் காலனைக் காய்ந்த எம் கடவுள
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர்
அறவன்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

3

முத்தன், சில் பலிக்கு ஊர்தொறும் முறை முறை திரியும்
பித்தன், செஞ்சடைப் பிஞ்ஞகன், தன் அடியார்கள்
சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர்
அத்தன்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

4

பாடுவார் இசை, பல்பொருள் பயன் உகந்து அன்பால்
கூடுவார், துணைக்கொண்ட தம் பற்று அறப் பற்றித்
தேடுவார், பொருள் ஆனவன் செறி பொழில் தேவூர்
ஆடுவான்; அடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

5
Go to top

பொங்கு பூண் முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன், கங்கையை வளர்சடை வைத்தான்,
திங்கள் சூடிய தீ நிறக் கடவுள், தென் தேவூர்
அங்கணன் தனை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.

6

வன் புயத்த அத் தானவர் புரங்களை எரியத்
தன் புயத்து உறத் தடவரை வளைத்தவன் தக்க
தென்தமிழ்க் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன்; சேவடி அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.

7

தரு உயர்ந்த வெற்பு எடுத்த அத் தசமுகன் நெரிந்து
வெருவும் ஊன்றிய திருவிரல் நெகிழ்ந்து, வாள் பணித்தான்
தெருவு தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர்
அரவு சூடியை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.

8

முந்திக் கண்ணனும் நான்முகனும்(ம்) அவர் காணா
எந்தை, திண் திறல் இருங்களிறு உரித்த எம்பெருமான்,
செந்து இனத்து இசை அறுபதம் முரல் திருத் தேவூர்
அந்தி வண்ணனை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.

9

பாறு புத்தரும், தவம் அணி சமணரும், பலநாள
கூறி வைத்தது ஒர் குறியினைப் பிழை எனக் கொண்டு
தேறி, மிக்க நம் செஞ்சடைக் கடவுள் தென் தேவூர்
ஆறு சூடியை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.

10
Go to top

அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன்,
நல்ல செந்தமிழ் வல்லவன், ஞானசம்பந்தன்,
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருத்தேவூர்
2.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பண் நிலாவிய மொழி உமை
Tune - காந்தாரம்   (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை)
3.074   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காடு பயில் வீடு, முடை
Tune - சாதாரி   (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000