![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: உத்தரமேரூர்
714 சுருதி மறைகள் 717 மாதர் கொங்கையில் 716 நீள் புயல் குழல் 715 தோல் எலும்பு
714
உத்தரமேரூர் சுருதி மறைகள் தனன தனன தனதான தனன தனன தனதான
தனன தனன தனதான ...... தனதான
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள்
துகளி லிருடி யெழுபேர்கள் ...... சுடர்மூவர்
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவி லுடுவி னுலகோர்கள் ...... மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
அரியு மயனு மொருகோடி ...... யிவர்கூடி
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறியு மறிவூற ...... அருள்வாயே
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
மகர சலதி அளறாக ...... முதுசூரும்
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடி ...... வருநாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத
நமனும் வெருவி யடிபேண ...... மயிலேறி
நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு
நகரி யுறையு மிமையோர்கள் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Z9amW6t89uU
Add (additional) Audio/Video Link
715
உத்தரமேரூர் தோல் எலும்பு தான தந்த தான தந்த தான தந்த தான தந்த
தான தந்த தான தந்த ...... தனதான
தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு
சோரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான
தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து
சோரு மிந்த நோய கன்று ...... துயராற
ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச
னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும்
ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை
யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை
வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே
மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து
வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே
வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற
மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=7wtlPwOUMIo
Add (additional) Audio/Video Link
716
உத்தரமேரூர் நீள் புயல் குழல் தானனத் தனதான தானனத் தனதான
தானனத் தனதான ...... தனதான
நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி
நேசமுற் றடியேனு ...... நெறிகெடாய்
நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி
நீதியிற் சிவவாழ்வை ...... நினையாதே
பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி
பாடலுற் றிடவேசெய் ...... திடுமோச
பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான
பார்வைசற் றருளோடு ...... பணியாயோ
ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு
மாகமப் பொருளோரு ...... மனைவோரும்
ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு
மாயிரத் திருநூறு ...... மறையோரும்
வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக
வாகுசித் திரதோகை ...... மயிலேறி
மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல
மான்மகட் குளனான ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
717
உத்தரமேரூர் மாதர் கொங்கையில் தான தந்தன தத்தா தத்தன
தான தந்தன தத்தா தத்தன
தான தந்தன தத்தா தத்தன ...... தனதான
மாதர் கொங்கையில் வித்தா ரத்திரு
மார்பி லங்கியல் முத்தா ரத்தினில்
வாச மென்குழ லிற்சே லைப்பொரும் ...... விழிவேலில்
மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில்
வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில்
வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில் ...... மயலாகி
ஆத ரங்கொடு கெட்டே யிப்படி
ஆசை யின்கட லுக்கே மெத்தவும்
ஆகி நின்றுத வித்தே நித்தலும் ...... அலைவேனோ
ஆறி ரண்டுப ணைத்தோ ளற்புத
ஆயி ரங்கலை கத்தா மத்திப
னாயு ழன்றலை கிற்பே னுக்கருள் ...... புரிவாயே
சாத னங்கொடு தத்தா மெத்தென
வேந டந்துபொய் பித்தா வுத்தர
மேதெ னும்படி தற்காய் நிற்பவர் ...... சபையூடே
தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள்
நீதி தந்திர நற்சார் புற்றருள்
சால நின்றுச மர்த்தா வெற்றிகொ ...... ளரன்வாழ்வே
வேத முங்கிரி யைச்சூழ் நித்தமும்
வேள்வி யும்புவி யிற்றா பித்தருள்
வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ் ...... மறையோர்வாழ்
மேரு மங்கையி லத்தா வித்தக
வேலொ டும்படை குத்தா வொற்றிய
வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள் ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:04 +0000